செம்மை நெல் சாகுபடி நாற்றங்கால்

நாற்றங்கால் தேர்வு செய்யப்படவேண்டும். நீர் நிலைக்கும் நடவு வயலுக்கும் அருகில் இருப்பது நல்லது. ஒரு எக்டர் நடவு செய்ய 20x7.5மீ பரப்பளவுள்ள (150 ச.மீ.) நிலம் போதுமானது. நிலத்தில் வாய்க்காலைத் தவிர்த்து 100 ச.மீ. நிலமே நாற்றங்கால் ஆகும்.

உழுது சமன் படுத்தப்பட்ட நிலம், 120 செ.மீ. (5 அடி) அகலமுள்ள பாத்திகளாக 50 செ.மீ. இடைவெளியில் இரண்டு அங்குலம் ஆழத்திற்கு மண்ணை எடுத்து இருபுறமும் உள்ள பாத்திகளில் பரவலாக விசிறி சமன் செய்யப்பட்டு அமைக்கவேண்டும். பாத்திகளின் நீளம் 20 மீட்டராக (சுமார் 60 அடி) அமைதல் சிறந்த முறையில் நீர் பாசனம் செய்வதற்கு ஏற்றது.

நஞ்சை சேற்று நெல் நாற்றங்கால்

தயாரிக்கப்பட்ட நிலம்2.5 மீ (8 அடி) அகலமுள்ள பாத்திகளாக, 30 செ.மீ ( ஒரு அடி) இடைவெளியுள்ளவாய்க்கால் பாத்தியைச் சுற்றிலும் அமைக்க வேண்டும்.

பாத்தியின் நீளம் 8 முதல் 10 மீ வரை நிலத்தின் சமன் அமைப்பு. மண்ணின் தன்மையைப் பொறுத்து அமைக்கலாம் வாய்க்கால் அமைக்கும்போது எடுக்கப்பட்ட மண்ணை பாத்தியில் பரப்பி நிரவலாம் அல்லது வாய்க்காலலை சீந்தி மூலம் அமைக்கலாம். பாத்தி சமன்படுத்தப்படுவது மிகவும் அவசியம்

நடவு வயல் பண்படுத்துதல்

கோடையுழவு செய்த வயல்களுக்கு ஆரம்ப நீர்த்தேவை குறைவாகத் தேவைபடுகின்றது  சேற்றுழவு செய்வதற்கு ஒரிரு நாட்கள்முன்பே தண்ணீர் தேங்கி நிற்கும் அளவிற்கு நீர் பாய்ச்சுதல் வேண்டும்  பின்னர் சேற்றுழவு முறையே செய்யப்பட வேண்டும்