தென்னையைத் தாக்கும் காண்டமிருக வண்டைக் கட்டுப்படுத்துவது எப்படி?
தென்னை மரத்தை அதிக விளைவுகளை ஏற்படுத்தும் காண்டமிருக வண்டுகளை கட்டுப்படுத்த...
முதல் முறை:
பெரும்பாலும் தற்போது தென்னை மரத்தின் குருத்து பகுதிகளில் வண்டுகள் பாதிப்பு அதிகம் இருப்பதால் மரமே அழிந்துவிடும் அபாயம் ஏற்படுகிறது.
இதனை தவிர்க்க வண்டு துளையிட்ட பகுதியில் சேவிடால் 8g (Sevidoal) (25g) இதனுடன் நுண் மணல் போன்றவற்றை வண்டு துளையிட்ட பகுதியில் போட்டுவிட வேண்டும்.
இதனை ஏப்ரல், செப்டம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் செய்தால் இந்த பிரச்சனையில் இருந்து விரைவாக விடுபடலாம்.
மற்றொரு முறை:
10.5g இரசக்கற்பூரத்தை, நுண் மணல் துகளுடன் நன்றாக கலந்து, வண்டு துளையிட்ட பகுதியில் போட வேண்டும். இதனை 45 நாட்களுக்கு ஒரு முறையோ (அ) வாரத்திற்கு ஒரு முறையோ பயன்படுத்தலாம். அதுமட்டுமல்லாது 0.01% கார்பரிழை (50wp) துளைபோட்ட பகுதியில் ஊற்ற வேண்டும்.
இன்னொரு முறை 250 ml Metarrizhium + 750ml தண்ணீர் கொண்டு துளையிட்ட பகுதியில் ஊற்ற வேண்டும்.
இலைகளுக்கு ஏற்படும் பாதிப்பிற்கும் இந்த வகை மருந்தினை தெளித்தல் இது தகுந்த பூச்சிகொல்லி மருந்தாக செயல்படும்.