பெட்டை ஆடுகளை தேர்வு செய்வது 

நல்ல இலாபம் தரக்கூடிய மந்தையில் இனப்பெருக்கத்திற்கு பெட்டையத் தேர்வு செய்தல் அவசியம். 

பெட்டை ஆடுகளின் நல்ல பால் மற்றும் இறைச்சி உற்பத்திக்கு அவை நல்ல உடல் அமைப்பு பெற்றிருக்கவேண்டும். 

உடல் நல்ல வளர்ச்சியுடன் தோற்றத்திற்கு ஆரோக்கியமானதாகவும் நான்கு கால்களையும் நன்கு ஊனி நிற்கக்கூடியதாகவும் இருத்தல் வேண்டும். 

பக்கவாட்டில் உடல் நீள முக்கோண வடிவமாகவும் கால்கள் வளையாமல் நேராகவும் தோள் கூர்மையாகவும் இருத்தல் வேண்டும். 

இடுப்புக்குழி எந்தளவு குழிந்துள்ளதோ அந்தளவுக்கு தீவனம் அதிகமாக உட்கொள்ளும். 

உடல் எடைக்குத் தகுந்தவாறு, மடி அதிகம் தொங்காமல் அடிவயிற்றின் பின்பகுதியில் நன்கு இணைந்திருக்க வேண்டும்.

ஆட்டின் தோல் நன்கு தளர்ச்சியாக, வழவழப்பாக, மிருதுவாக இருக்கவேண்டும். 

சில இனங்களில் நல்ல பால் உற்பத்தி செய்யும் மாடுகளில் சதைப்பற்று குறைவாக இருக்கும். 

கழுத்து மெலிந்து தலையுடன் நேர்க்கோட்டில் இருக்கவேண்டும். 

கண்கள் தெளிவாக பளிச்சென்று இருக்கவேண்டும். 

பெட்டை ஆடுகள் சாதுவாகவும் பெண்மைத் தோற்றத்துடனும், இருக்க வேண்டும். 

மடி சதைப்பற்றின்றி மென்மையாக நல்ல வளைந்து கொடுக்கும் தன்மையுடன் இருத்தல் வேண்டும். 

காம்புகள் முன்னோக்கி சற்று கூர்மையானதாகவும் இருக்கும்.