Asianet News TamilAsianet News Tamil

நாட்டுக் கோழிகளை கோடைகாலங்களில் எப்படி பராமரிக்கணும்? வாசிங்க தெரியும்...

How to care for chickens in summer Know you know ...
How to care for chickens in summer Know you know ...
Author
First Published Mar 15, 2018, 1:46 PM IST


நாட்டுக் கோழிகளை கோடைகால பராமரிப்பு

கோழிகள் தீவனம் இல்லாமல் பல நாட்களுக்கு உயிர்வாழும். ஆனால் தண்ணீர் இல்லாமல் அவற்றால்உயிர்வாழ முடியாது. கோழிகளைப் பொறுத்தமட்டில் தண்ணீர் இன்றியமையாப் பொருளாகும். கோடை காலங்களில்சுற்றுப்புற வெப்பத்தை குறைப்பதில் தண்ணீர் பெரும்பங்காற்றுகிறது. 

வணிக அளவில் வளர்க்கப் படும்இறைச்சிக்கோழிகளுக்கு அவை உண்ணும் தீவனத்தைப் போல இரு மடங்கு தண்ணீர் தேவை. கோடையில் கோழிகளின்உடலிலிருந்து கூடுதலாக வெப்பம், அவை விடும் மூச்சுக் காற்றின் மூலமே வெளியேறுகிறது. பறவைகளைப்பொறுத்தமட்டில் வியர்வைச் சுரப்பிகள் இல்லாத காரணத்தால் கூடுதலாக உண்டாகும் உடல்வெப்பத்தை வியர்வைமூலம் வெளியேற்ற இயலாது. 

எனவே கோழிகளால் சுவாசக் காற்று மூலம்தான் உடல் சூட்டினை தணித்துக் கொள்ளமுடியும். இதற்காக கோழிகளுக்கு பெருமளவு தண்ணீர் தேவைப் படுகிறது. கோடையில் ஹீட் ஸ்ட்ரோக் எனப்படும்வெப்ப அயர்ச்சியைக் குறைக்க தகுந்த தண்ணீர் கொடுப்பதன் மூலம் குறைக்கலாம். இத்துடன் தாது உப்புக்களையும்போதிய அளவு சேர்த்துக் கொடுத்தால் வெப்ப அயர்ச்சி குறைபாட்டை நீக்குவதுடன் கோழிகளுக்கு தண்ணீர் குடிக்கவேண்டும் என்ற எண்ணத்தையும் தூண்டுகின்றன. 

தண்ணீரில் நோய் உண்டாக்கும் கிருமிகளின் அளவைக் குறைக்ககுளோரின் பவுடர், அயோடின் கலவைகள், ஹைட்ரஜன் பெர் ஆக்சைடு போன்றவற்றை பயன் படுத்தலாம். இதில்குறைந்த செல வில் குளோரின் வாயுவைப்பெற 1000 லிட்டர் தண்ணீருக்கு 5 கிராம் வரை பிளீச்சிங் பவுடரைப்பயன்படுத்தலாம். 

அயோடின் தயாரிப்புகளை 10 லிட்டருக்கு 1 மிலி வீதம் பயன்படுத்தலாம். தரமற்ற குடிநீர் கோழிக்குரத்தக்கழிச்சல், சால்மோனல்லோசிஸ், கோலி பேசில்லோசிஸ் போன்ற நோய் பாதிப்புகளை உண்டாக்குவதுடன்அவற்றின் உற்பத்தி திறனையும் குறையச் செய்கின்றன. முட்டையிடும் கோழிகள் முட்டையிட்டவுடன் அதிக அளவுதண்ணீரைக் குடிக்கும். 

இரவு நேரங்களில் வெளிச்சத்துக்காகப் போடப்படும் விளக்குகளை அணைப்பதற்கு முன்னும்,அதிக தண்ணீர் அருந்தும். இறைச்சிக் கோழிகளைப் பொறுத்தமட்டில் சூரிய ஒளி பட்டவுடன் அல்லது செயற்கையாகவெளிச்சம் அளித்தவுடன் அதிக அளவு தண்ணீர் குடிக்கும். 

எனவே, கோடையின் வெப்பத் தாக்குதலை உணர்ந்து, தகுந்தஅளவில், தரமுள்ள தண்ணீர் கோழிகளுக்கு வழங்க வேண்டும்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios