நிலத்தை பண்படுத்துதலில் எத்தனை வகைகள் இருக்கு? அதன் பயன்கள்…

How many types are there in plowing the land? Its benefits ...
How many types are there in plowing the land? Its benefits ...


நிலத்தை பண்படுத்துதல்:

மண்ணின் பெளதீக குணங்களை உழவுக் கருவிகள் மூலம் சாதுர்யமாக கையாண்டு விதை முளைப்பு நாற்று வளர்ப்பு மற்றும் பயிர் / தாவர வளர்ச்சி போன்றவற்றிற்கு ஏற்ற சூழ்நிலையை உருவாக்குதலே உழவு.

உழவின் நன்மைகள்

** காற்று பரிமாற்றத்திற்கு வழிவகுக்கிறது.

** போதுமான விதை மண் தொடர்பினை ஏற்படுத்துவதன் மூலம் விதை மற்றும் நாற்றின் வேருக்குத் தேவையான நீரினை அனுமதிக்கிறது.

** இறுக்கம் இல்லாத மண்ணில் நாற்று முளைத்து வளர்வதற்கு வழிவக்கும்.

** அடர்வு குறைவான மண், வேர் வளர்ச்சி மற்றும் செல் பெருக்கத்திற்கு உதவுகிறது.

** நாற்றிற்கு சூரியஒளி தரும் வகையிலான சூழ்நிலையை உருவாக்கும். (களைகளற்ற சூழ்நிலை)

** பூச்சி மற்றும் நோய் கிருமிகளற்ற சூழ்நிலையை உருவாக்கும்.

** இயற்கை எரு மற்றும செயற்கை உரம் மண்ணுடன் கலப்பதற்கு உதவுகிறது.

** மண் இறுக்கத்ததை நீக்கி நீரை கிரகித்து மண் ஆழத்தை அதிகப்படுத்துகிறது.

நில பண்படுத்துதலின் வகைகள்

தேவையின் அடிப்படையில் உழவு இரண்டு முக்கியப் பிரிவுகளைக் கொண்டுள்ளது.

முதன்மை உழவின் வகைகள்

பயிர் செய்தலின் தேவைக்கு ஏற்ப உழவின் வகை / உழவு முறை மாறுபடும். அவை, ஆழமான உழவு, அடிமண் உழவு மற்றும் வருடாந்தில உழவு போன்றவை ஆகும்.

1.. ஆழமான உழவு முறை

ஆழமான உழவு கோடையில் உழுவதால் உருவாகும் பெரிய மண் கட்டிகள் சூரிய வெப்பத்தில் காய்க்கின்றன. இக்கட்டிகள் மாறிமாறி வரும் வெப்பம் மற்றும் குளிரினால் நொறுங்குகின்றன மற்றும் எப்பொழுதாவது வரும் கோடை மழையினால் நனைகின்றன. இவ்வகை சீரான மண் கட்டி சிதைவினால் மண் கட்டமைப்பு மேம்படுகிறது.

பல்லாண்டு வாழ் களைகளின் உலகம் முழுவதும் பரவியுள்ள களைகளை அருகம்புல் மற்றும் சைப்ரஸ் ரோட்டுன்டஸ் கிழங்கு மற்றும் வேர்க் கிழங்குகள் சூரிய வெப்பத்திற்கு உட்படும் போது அழிகின்றன. கோடைக்கால ஆழமான உழவு, கூட்டுப்புழுக்களை சூரிய வெப்பத்திற்கு உட்படுத்துவதால் பூச்சிகள் அழிகின்றன.

துவரை (Pigeonpea) போன்ற ஆழமான வேர் கொண்ட பயிர்களுக்கு 25-30 செ.மீ ஆழ உழவும், சோளம் போன்ற மேலோட்டமான வேர் கொண்ட பயிர்களுக்கு 15-20 செ.மீ ஆழ உழவும் தேவை.

மேலும் ஆழமான உழவு, மண் ஈரப்பதத்தை உயர்த்தும். மானாவாரி வேளாண்மையில் மழைப்பருவம் மற்றும் பயிரினை பொருத்து ஆழ உழவின் நன்மை அமையும். ஆழ வேர்ப் பயிர்களுக்கு, ஆழ உழவு முறை நீண்ட இடைவெளியில் பரிந்துரைக்கப்படுகிறது. ஆழ உழவு மழை ஈரப்பத அளவை பொருத்து அமையும்.

அடிமண் உழவு முறை

கடின மண் தட்டு, பயிரின் வேர் வளர்ச்சியை தடுக்கலாம். இவ்வகை மண் தட்டுக்கள், வண்டல் மண் தட்டு, இரும்பு அல்லது அலுமினியம் தட்டு, களிமண் தட்டுக்கள் அல்லது மனிதனால் உருவாக்கப்பட்ட தட்டுக்களாக இருக்கலாம். தொடர்ந்து ஒரே ஆழத்தில் உழுவதால், மனிதனால் உருவாக்கப்படும் தட்டு உண்டாகிறது. கடினமண் தட்டினால், பயிரின் வேர் ஆழமான வளர்வது தடுக்கப்படுவதினால், ஒரு சில செ.மீ ஆழத்தில் வேர்கள் அடர்ந்து காணப்படும்.

எடுத்துக்காட்டாக வண்டல் மண்ணில் கடின மண் அடுக்கு அற்ற நிலையில் 2 மீட்டர் ஆழம் வரை பருத்தி வேர் வளரும். கடின மண் அடுக்கு இருக்கும் போது 15-20 செ.மீ ஆழம் வரையே வளரும். இதே போன்று கரும்பில் செங்குத்து வேர் வளர்ச்சி கடின மண்ணினால் தடுக்கப்படுகிறது மற்றும் கிடையான வேர் வளர்ச்சி அதை ஈடுசெய்ய அடிமண் உழவு மேல் மண்ணை சிறு பாதிப்புடன், கலக்கச் செய்யலாம்.

கடின மண் கட்டிகளை உடைக்கும். அடிமண் உழவு கடின மண்ணை உடைக்கும் பொழுது குறுகிய வெட்டுக்கள் மேற்பரப்பு மண்ணில் உண்டாகிறது. உளிக்கலப்பை கொண்டு உழும் பொழுது 60-70 செ.மீ அடியில் காணப்படும் கடின உடையும் அடிமண் உழவின் பலன் பல நாட்களுக்கு காணப்படும் அடிமண் சால்கள் மூடுவதைத் தடுக்க, செங்குத்து நிலப்போர்வை அமைக்கப்படுகிறது.

வருடாந்திர உழவு

வருடம் முழுவதும் நடைபெறும் உழவு / செயல்பாடுகளே வருடாந்திர உழவு ஆகும். மானாவாரி வேளாண்மையில் கோடை மழையின் உதவியுடனே, வயல் முன்னேற்பாடுகள் தொடங்கும்.

விதைக்கும் வரை மேலும் மேலும் உழவு செய்யப்படும். அறுவடை முடிந்த பின்பு, பருவ நிலை அல்லாத காலங்களில் கூட தொடர்ந்து உழவு அல்லது கொத்துதல் / பலுதல், களை வளர்ச்சியை தடுப்பதற்கு செய்யப்படும்.

இரண்டாம் நிலை உழவு

முதன்மை நிலை உழவிற்கு பிறகு மண்ணில் செய்யப்படும் இலேசான அல்லது இளகுவான அனைத்துச் செயல்களும் இரண்டாம் நிலை உழவு என அழைக்கப்படுகிறது. உழவிற்கு பிறகு, வயல்வெளி பாதி பிடுங்கப்பட்ட தாள்கள் மற்றும் களைகளுடனான பெரிய மண் கட்டிகளைக் கொண்டு காணப்படும்.

கட்டிகளை உடைப்பதற்கு மற்றும் மீதமுள்ள களை மற்றும் தாள்களை பிடுங்கி களைவதற்கும் கட்டி உடைத்தல் / பலுதல் செய்யப்படுகிறது. இதற்கு சட்டிப்பலுகு, கொத்துக் கலப்பை, கத்தி பலுகு போன்றவை.

கடின கட்டிகளை உடைத்து மண் மேற்பரப்பை சீராக்கவும், ஓரளவு மண்ணை சமன்படுத்தவும், பரம்பு அடித்தல், பலகைக் கொண்டு சமன் செய்யப்படுகிறது. உழுதலைத் தொடர்ந்து, கட்டி உடைத்தல் மற்றும் பரம்பு அடித்தல் முடிந்த பின் வயல் விதைப்பதற்கு தயாராக இருக்கும். பொதுவாக விதைத்தலும் ஒரு வகை இரண்டாம் உழவிலேயே அடங்கும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios