மரிக்கொழுந்தில் இருந்து வாசனை எண்ணெய் எடுக்கும் முறை

வாசனை எண்ணெய் எடுக்க மரிக்கொழுந்து செடிகளை அதிக அளவு பூ மொட்டுகள் வெளிவந்த பின்பு பிப்ரவரி மாத கடைசியில் அல்லது மார்ச் மாதம் அறுவடை செய்து 2-3 நாட்கள் காய வைக்க வேண்டும்.

காய்ச்சி வடிக்கும் முறையில் எண்ணெய் பிரித்தெடுத்தப்படுகிறது. வடிகலன் மிருதுவான இரும்பல் செய்யப்பட்டு அடிப்பாகத்தில், துளைகளோடு கூடிய உலோகத் தட்டை கொண்டிருக்கும்.  இதனுள் இலைகள் நெருக்கமாக இடைவெளியின்றி அடைக்கப்பட வேண்டும்.  

இலைகளை அடைப்பதையும், எடுப்பதையும் இயந்திரங்கள் மூலமாகவும் செய்யலாம்.  இக்கலத்தின் மூடியை தேவைப்படும் போது தள்ளி வைத்துக் கொள்ளலாம். 

இலைகள் நெருக்கமாகவும் ஒன்று போலும், அசைக்கபட்டாவிட்டால் எண்ணெய் விளைச்சல் மிகவும் குறைந்துவிடும்.

கொதிகலனிலிருந்து வரும் நீராவி, ஆவியாக்குதல் முறையில் இலைகளிலிருந்து காய்ச்சி வடித்து வரும் எண்ணெயை, கண்டென்சர் கலங்கள் குளிர்வித்து அங்கிருந்து சேமிப்பு கலங்களுக்கு அனுப்புகின்றன.

இந்த எண்ணெய் தண்ணீரை விட எடை குறைவாக  இருப்பதாலும், தண்ணீரில் கரையாததாலும், மேலே மிதக்கின்றது. கீழே உள்ள நீர் அடியில் உள்ள வடிகுழாய் மூலமாக வெளியேற்றப்படுகிறது.

ஒருமுறை எண்ணெய் எடுக்க சுமார் 6-8 மணி நேரமாகின்றது.  எண்ணெய் எந்த விதமான கசடுகள் அல்லது மிதக்கும் பொருட்கள் இல்லாமல் சுத்தமாக இருக்க வேண்டும். எண்ணெயை அலுமினிய பாத்திரங்களில் விளிம்பு வரை இருக்கத்தக்கதாக சேமிப்பு வைக்க வேண்டும்.