நெற்பயிருக்கு தழைச்சத்து

** நெற்பயிரின் முக்கிய ஊட்டச்சத்தான தழைச்சத்து பொதுவாக நெல் உற்பத்தித் திறனை வரையீடு செய்கின்றது.

** இலைகளுக்கு நன்கு ஆரோக்கியமான பச்சை நிறத்தை அளித்து, தழைப்பகுதி வளர்ச்சியை மேம்படுத்துகின்றன.

** தழைச்சத்தானது, மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்துப் பொருளை பயிர்கள்  நன்கு எடுத்துக் கொள்ள உதவுகின்றது.

** குறைந்த அளவு தழைச்சத்து (25 கிலோ தழைச்சத்து/எக்டர்) உள்ள பகுதிகளில் “இன்டிகா” இரகங்கள் அதிகளவில் நன்கு வளர்கின்றன.

** அதிக அளவு தழைச்சத்து அளிப்பதால், பயிர் சாய்தல் மற்றும் அதன் தொடர்ச்சியாக மகசூல் இழப்பும் ஏற்படும்.

** காற்றில்லா நிலைகளில் கரிமப்பொருள் சிதைவுறுதல் ஏற்படும்போது நெற்பயிருக்குத் தேவையான தழைச்சத்தினை கரிமப்பொருளிலிருந்து எடுத்துக் கொள்கிறது.  

** மேலும் பயிரின் முன் வளர்ச்சி நிலைகளில் அதற்குத் தேவைப்படும் தழைச்சத்தினை, நீர் முழ்கிய மண்ணில் தழைச்சத்தின் நிலையான தன்மையான அமோனியா வடிவத்தில் பயிர் எடுத்துக் கொள்கிறது.

** நெற்பயிரில் தழைச்சத்து அதிகமாய் தேவைப்படும் இரு வளர்ச்சி நிலைகள்: முன் தழை வளர்ச்சி நிலை மற்றும் பூங்கொத்து உருவாகும் நிலைகள்

** முன் தழை வளர்ச்சி பருவத்தில் பயிருக்கு உரமளித்தால் துார்கள் உற்பத்தி அதிகரித்து, அதிக மகசூல் கிடைக்கும்.

** பூங்கொத்து உருவாக்க நிலை அல்லது முன் கதிர் வைக்கும் பருவத்தில் உரம் அளிப்பதால், பயிர்கள் ஒரு பூங்கொத்திற்கு அதிகமான மற்றும் கனமான நெல்மணிகளை உற்பத்தி செய்ய உதவுகின்றது.