சினைப் பருவம்

பால் சுரத்தல் தற்காலிகமாக அதிகரிப்பதே ஆடு சினை அடைந்ததன் முதல் அறிகுறியாகும். 

ஓஸ்டிரஸ் திரவம் வழிவது நின்று விடும். சினைப் பிடித்த முதல் 3 மாதங்களில் குட்டியின் உடல் உருவாகத் தொடங்கும். 

6-8 வாரங்களில் குட்டியின் தலைப் பாகம் உருவாகும். கன்று ஈனும் பெட்டை ஆடானது உருவத்தில் மாற்றம் பெற்றுக் காணப்படும். சில சமயங்களில் வயிறு புடைப்பதும் தெரியாது. 

குட்டி ஈனுவதற்கு முன் 6-8 வாரங்களில் மடி உப்பிக் காணப்படும். ஆனால் இதை மட்டும் வைத்து ஆடு சினைப்பிடித்துள்ளதாக எண்ணிவிட முடியாது. 

சில சமயங்களில் சினைப் பிடிக்காத போதும் மடியிலிருந்து பால் சுரக்கும்.

ஒரு சாதாரண ஆடு 2 குட்டிகள் ஈனும், நன்கு பராமரிக்கப்பட்ட ஆடு 5 குட்டிகள் வரை ஒரே நேரத்தில் ஈனும். ஆனால் குட்டிகள் எந்தளவு குறைவாக ஈனுகிறதோ அந்த அளவுக்கு ஆரோக்கியமான குட்டிகளாக இருக்கும். 

குட்டிகளின் எண்ணிக்கை ஆட்டு இனம்,  தட்பவெப்பநிலை, சினைப் பிடிக்கும் முறை ஆகியவற்றைப் பொறுத்தது. ஹிசார் பண்ணையில் பீட்டல் இனமானது 35 சதவிகிதம் ஒரு குட்டியும் 54 சதவிகிதம் இரு குட்டிகளும், 6.3 சதவிகிதம் 3 குட்டிகளும் 0.4 சதவிகிதம் 4 குட்டிகளும் போடும் திறன் பெற்றது. 

ஜமுனாபுரியியல் இரட்டைக் குட்டி ஈனும் சதவீதம் 19-50 சதவிகிதம் 19-50 சதவிகிதம் அளவு வேறுபடுகிறது. இதுவே பார்பரியில் 47-70 சதவிகிதம் அளவு வேறுபடுகிறது.