மண்புழு உரம் தயாரித்து பருத்தியின் உரத் தேவையை எப்படி பூர்த்தி செய்வது?
மண்புழு உரம்
சுயசார்புடைய பசுந்தாள் உரங்கள் மற்றும் தொழுவுரம் ஆகிய மண்ணின் அங்ககத் தன்மையை அதிகரிக்கும் காரணிகளாகும். இருப்பினும் சி சூழ்நிலைகளுகடகு இவைகளால் தேவையை முழுவதுமாக பூர்த்தி செய்ய முடிவதில்லை.
ஏராளமாந மண்ணின் கழிவுகள் மற்றும் தாவர பொருட்கள் வெருமனே எரிக்கப்படுகின்றன. இதற்காக பண்ணைக் கழிவுகள் மற்றும் தாவர பொருட்களை மறுசுழற்சி செய்வதன் மூலம் உபயோகப்படுத்த முடியும்.
நவீன கருத்துக்களின் அடிப்படையில் மண்புழுக்கள் மற்றும் பூஞ்சானங்கள் இந்த சுழற்சிக்கு பயன்படுகின்றன. இந்திய மண்புழு இனத்தை சேர்ந்த எசேனியா புடிடா என்ற இனம் பண்ணைக்கழிவுகளை ஒருமாத காலத்தில் மண்புழு உரமாக மாற்றிவிடுகிறது. மேலும் பாலிதீன் தவிர மற்றவைகளை மக்கச் செய்துவிடுகிறது.
மண்புழு உரம் தயாரிக்க 15-25 செமீ உயர படுக்கையினை தயார் செய்ய வேண்டும். இந்த படுக்கையின் நீள அகலம் பண்ணைக் கழிவுகளில் கிடைப்பதை பொருத்து அமைத்துக் கொள்ளலாம்.
இந்த படுக்கைகள் நடுவில் உயர்ந்தும் பக்கவாட்டில் சரிவாக இருக்குமாறும், (வடிகால் வசதியை ஏற்படுத்துவதற்காக) கூடுமானவரை நிழலில் இருக்குமாறும்அமைத்துக்கொள்ள வேண்டும். மண்புழுக்கள் வெளிச்சத்தை விரும்புவதில்லை. அதனால் படுக்கைகளை மூடி வைத்திருக்க அறிவுறுத்தப்படுகிறது.மேலும் இருளானது மக்கும் காலத்தைக் குறைக்கிறது.
படுக்கையின் மூதல் அடிக்கில் லேசான பொருட்களான கோதுமை/சோயபீன் தோலினை அடுக்கவும். பின் சாண கரைசலை லேசாக தெளிக்கவும். ஒரு கிலோ மண்புழுக்களை 10 மீட்டர் நீளம் 2 மீட்டர் அகலம் உள்ள படுக்கையில் விடவும். இதற்கு மண்புழு முட்டைகள் அல்லமு மண்புழு உரத்தில் உள்ள கரிய மண்புழுக்களையே உபயோகப்படுத்தலாம்.
களைகள், நறுக்கிய இலை, தழைகள், பண்ணைக் கழிவுகள், வீட்டுக்கழிவுகள் மற்றும் மற்ற மக்க சுடிய பொருட்கள் அனைத்தையும் இந்த படுக்கையின் மீது போட்டுக் கொள்ளவும். இந்த படுக்கையை லேசான ஈரப்பதம் இருக்குமாறு அடிக்கடி நீரை தெளித்து வர வேண்டும். ஆனால் நனைந்து விடக் கூடாது.
இதற்கு உகந்த ஈரப்பதம் மற்றும் வெப்பநிலை (27-330செ) மக்க எடுத்துக் கொள்ளும் காலம் 40-50 நாட்கள். மண்புழுவின் எச்சத்தில் தோராயமாக 1.2-1.4% மணிச்சத்துக்களும் அடங்கியுள்ளன. இந்த சத்தக்கள் படுக்கை மற்றும் மக்க வைக்கப்படும் பொருட்களை பொருத்து மாறுபடும்.
மண்புழுவின் எச்சத்தில் அது எடுத்துக்கொள்கின்ற பொருட்களைவிட தழைச்சத்துக்கள் அதிக அளவில் அடங்கியுள்ளது.