ஒருங்கிணைந்த பண்ணையில் காளான் மற்றும் மீன் வளர்ப்பு முறை

இந்தியாவில் காளான்வளர்ப்பு பிரபலமடைந்து வருகிறது. 3 வகைக் காளான்கள் விற்பனைக்காக வளர்க்கப்படுகின்றன. அவை மொட்டுக்காளான், பால் காளான்,  வோலோரியல்லா, மற்றும் சிப்பிக்காளான் பிளிரோட்டஸ் ஆகும். 

இவை முறையே யூரோப்பியன் மொட்டுக்காளான் (பால்) வைக்கோல் மற்றும் சிப்பிக்(சிர்லக்) காளான் என அழைக்கப்படுகிறது. காளான் வளர்ப்புக்கு அதிக ஈரப்பதமான தட்பவெப்பம் தேவைப்படுகிறது. எனவே மீன் வளர்ப்புடன் சேர்த்துக் காளான் வளர்ப்பு செய்வது பொருத்தமானதாக இருக்கும்.

காளான் வளர்ப்பிற்கு வைக்கோலை 1 - 2 செ.மீ அளவிற்கு சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ள வேண்டும். அதை நீரில் இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். மீதமுள்ள நீரை அடுத்த நாள் காலையில் வடித்துவிட வேண்டும். 

கொள்ளுப்பொடி சிறிதளவு (8கி / கி.கி வைக்கோல்) மற்றும் காளான் விதை 30 கி / கி.கி வைக்கோல் என்ற அளவில் கலந்து அதை நீரில் நனைத்த வைக்கோலுடன் அடுக்கடுக்காக அமைக்க வேண்டும். இதை ஒரு பாலிதீன் கவரில் வைத்து 21 - 350 செல்சியஸ் வெப்ப நிலை கொண்ட இருட்டறைக்குள் சிறிது வெளிச்சமும் நல்ல காற்றும் நிலவுமாறு வைத்துவிட வேண்டும். 

11 - 14 நாட்களில் சிறு சிறு காளான்கள் முளைத்திருக்கும். இந்நிலையில் பாலிதீன் பைகளை வெட்டி விடுதல் வேண்டும். ஆங்காங்கு ஓட்டை விழுமாறு செய்வதால் காளான்கள் பெரிதாக வளர ஏதுவாகும். பின்பு வளர்ச்சியடைந்த காளான்களை அறுவடை செய்து கொண்டு வைக்கோல் கழிவுகளை கால்நடைகளுக்கு தீவனமாகக் கொடுத்து விடலாம்.