மஞ்சள் பயிர் பராமரிப்பு

நடவு செய்த ஒரு வாரத்தில் களைகள் முளைக்கத் தொடங்கிவிடும். இவற்றை அகற்றிவிட சுரண்டுகளை செய்ய வேண்டும். 

15 நாட்கள் கழித்து மீண்டும் களைகள் இருப்பின் கைகளை எடுத்து அகற்ற வேண்டும். களைக் கொல்லி போன்ற எந்தக் வேதிக் கொல்லிகளையும் பயன்படுத்தக் கூடாது. 30 நாட்கள் கழித்து களை இருந்தால் மற்றொருமுறை களை அகற்ற வேண்டும். 

பின்னர் மஞ்சள் செடி, பாரின் நடுவில் வருமாறு மண் அணைக்க வேண்டும். முன்னர் கூறிய பலவகைப் பயிர்களை ஏக்கருக்கு 10-12 கிலோ வீதம் பாரின் நடுவே து£வி உடன் நீர் பாய்ச்ச வேண்டும்.

நடவு செய்த ஐம்பது நாட்கள் கழித்து பாரில் தூவிவிட்ட பலவகைப் பயிர்கள் நன்கு வளர்ந்து இருக்கும். இவற்றை எல்லாம் பிடுங்கி ஒருபார்விட்டு ஒருபாரில் பரப்பிவிட வேண்டும். இதற்கு மூடாக்கு என்று பெயர். 

பரப்பிய பாரில் நீர் பாயாதவாறு மண்ணால் மூடிவிட வேண்டும். இதனால் பாதியளவு பாசனம் போதுமானதாகிறது பயிர்களைப் பரப்பி வைப்பதால் நீராவிப் போக்கு கட்டுப்படுத்தப் படுகிறது. மண்புழுப் பெருக்கம் அதிகமாகி விரலி ஓட்டம் அதிகரிக்கும். 

நிலம் பொலபொலப்பாக மாறும்.நடவிற்கு 60 நாள் கழித்து தோட்டத்தில் காணப்படும் புல், பூண்டு மற்றும் சுற்றியிருக்கும் செடி,கொடிகளை சேகரித்து பலவகைப் பயிர்கள் பரப்பிய பாரில் போட வேண்டும். 

அதை அறுவடை வரையில் தொடர்ந்து செய்துவரலாம். பயிர்வளர்ச்சி குன்றி இருந்தால் அல்லது ஊக்கம் இன்றி இருந்தால் இதில் சொல்லப்பட்ட வளர்ச்சி ஊக்கியைப் பயன்படுத்தலாம்.

அமுதக் கரைசல் (உடனடி வளர்ச்சி ஊக்கி)இதை நடவு செய்த 45 ஆம் நாளிலிருந்து பயன்படுத்தலாம்.

மாட்டுச் சாணம் – 1கிலாமாட்டுச் சிறுநீர் – 1 லிட்டர்பனைவெல்லம் – 250 கிராம்நீர் – 10 லிட்டர் இவற்றை நன்கு கலக்கி 24 மணி நேரம் ஊறவைத்து இதிலிருந்து 1 லிட்டர் கரைசலை எடுத்து 10 லிட்டர் நீரில் கலந்து தெளிப்பான் மூலம் மஞ்சள் இலைகளில் நன்கு படுமாறு தெளிக்க வேண்டும். 

நடவு செய்த 45 நாளில் 50 லிட்டர் கரைசல் போதுமானது.