நன்னீர் மீன் வளர்ப்பு - குளத்து மண்ணில் மேற்கொள்ள வேண்டிய ஊட்டச்சத்துகள்...
குளத்து மண்ணில் மேற்கொள்ள வேண்டிய ஊட்டச்சத்துகள்
முக்கியமான ஊட்டச்சத்துக்கள் தழை, மனி, மற்றும் சாம்பல் சத்துக்களாகும். மீன் குளங்களில் பாஸ்பேட் உரத்திற்கு சூப்பர் பாஸ்பேட்டை பயன்படுத்தலாம். குளத்து மண்ணில் உள்ள பாஸ்பேட் அளவைப் பொருத்து 156 - 312 கி சிங்கிள் சூப்பர் பாஸ்பேட் அளிக்க வேண்டும்.
மீன் வளர்ச்சி மற்றும் இருப்பு குளங்களில் செய்யும் போது 250 - 468 கி சூப்பர் பாஸ்பேட் இருக்க வேண்டும். இன்னும் நல்ல உற்பத்தி கிடைக்க வேண்டுமென்றால் வார இடைவெளி விட்டு பாஸ்பேட் உரம் அளிக்க வேண்டும்.
மியுரேட் ஆஃப் பொட்டாஸ் மற்றும் பொட்டாசியம் சல்பேட் இவை இரண்டும் பொட்டாஸ் உரங்களாக மீன் குளத்தில் பயன்படுத்துகிறார்கள். மியுரேட் ஆஃப் பொட்டாஸ் 16 - 32 கி/ஹெ. அல்லது பொட்டாசியம் சல்பேட் 20 - 40 கி/ஹெ. வளர்ச்சி மற்றும் இருப்புச் செய்யும் போது அளிக்க வேண்டும்.
இதை ஒரு மாதத்திற்கு இரண்டு முறையில் சரிபாதியாக பிரித்து அளிக்க வேண்டும். குளத்தில் நீர் நல்ல கரும்பச்சை நிறத்தில் இருக்கும்போதே குளங்களில் அதிக பாசிகள் தோன்றி நீரின் மீது அடை அடையாக மிதக்கும்.
இதன் மூலம் உயிர்வளிக் குறைவை தடுக்கலாம், குறைந்த உரங்களே தேவைப்படும். இயற்கை மற்றும் இரசாயன உரங்களை கலந்து இடும் போது கவனம் தேவை. சுத்தமில்லாத குளத்தில் இயற்கை உரமிட்டால் சுத்தமாகும். அதிக இயற்கை உரமிடுவதால் பாசிகள் நிறைய வளரும்.