கூண் வண்டு தாக்குதலின் அறிகுறிகள்

** தண்டு கூன் வண்டின் புழுக்களானது 5 முதல் 6 மாத வயதுடைய மரங்களையே பெரும்பாலும் தாக்குகின்றன. 

** இப்புழுக்கள் தண்டினை விரும்பி உண்பதால் 7-வது மாதத்துக்கு மேல் இதன் தாக்குதல் அதிகமாக காணப்படும். 

** இந்தப் புழுக்கள் மரப்பட்டையைக் குடைந்து உள்ளே செல்வதால், துவாரம் ஏற்பட்டு அதில் பிசின் வெளிப்படும்.

** இவற்றின் தாக்குதலால் பயிருக்குத் தேவையான ஊட்டச்சத்து மற்றும் நீர் போன்றவை தடைபட்டு வளர்ச்சி குன்றிவிடும். 

** இலைகள் மஞ்சள் நிறமாக மாறுவதுடன் தண்டு திசுக்கள் அழுகிவிடும், வாழைப் பூ வெளிவருவது தடைபடும் மற்றும் காய்கள் சிறுத்துவிடும்.

** பாதிப்பு அதிகம் ஏற்படும்போது லேசான காற்றில் கூட மரங்கள் சாய்ந்துவிடும். நேந்திரன், மொந்தன், ரொபஸ்டா, செவ்வாழை மற்றும் கற்பூரவள்ளி போன்ற ரகங்களில் இந்த வண்டுகளின் தாக்குதல் அதிகமாக காணப்படும்.

** தாய் வண்டானது தன்னுடைய மூக்கினால் தண்டில் சிறிய துளைகளை ஏற்படுத்தி அதில் முட்டையிடுகின்றன. முட்டையில் இருந்து வெளிவரும் புழுக்களானது தண்டினை தின்று உள்ளேயே கூட்டுப்புழுக்களாக மாறுகின்றன. பின்னர், கூட்டுப்புழுவில் இருந்து கருப்பு நிற வண்டு வெளிவரும்.