கோழிப்பண்ணை என்பது ஒரு  நல்ல இலாபகரமாண தொழில்தான். காரணம் கோழியின் கறி, முட்டை மட்டுமல்ல அதன் கழிவுகளும் கூட நல்ல விலைக்கு விற்பனை செய்துவிடலாம்.

நல்ல சீதோசனமும், ஆலோசனைக்கு நல்ல மருத்துவரையும் உங்கள் பக்கம் ஒத்துழைக்கும்படி அமைந்துவிட்டால் அடுத்த 90 நாட்களில் நீங்கள் இலட்சாதிபதியாக மாறிவிடுவீர்கள்.. ஆம், கோழி வளர்ப்பு நல்ல இலாபம் தரக்கூடியது தான்.

முதலில் புதிதாக கோழிப்பண்ணை அமைக்க எண்ணம் உள்ளவர்கள் அடிப்படையில் அமைந்த சில விசயங்களை தெரிந்துகொள்வது மிகவும் அவசியம்.

கோழி வளர்ப்பு கறிக்கோழி (பிராய்லர்), நாட்டுக்கோழி, முட்டைக்கோழி என தனித்தனி வளர்ப்பு முறை உள்ளது. இதில் உங்களுக்கு ஏற்புடையது எது என்பதை உங்கள் முதலீட்டு தொகையை வைத்து முடிவு செய்யுங்கள்.

கோழிவளர்ப்பில் கறிக்காக வளர்க்கப்படுபவை, முட்டைக்காக வளர்க்கப்படுபவை என்று இரு வேறு பண்ணைகள் உண்டு.

பெறும்பாலும் பலரும் கறிக்கோழி வளர்ப்பதையே குறைந்தம் முதலீடு என்பதற்காக தேர்வு செய்கின்றனர்.

முட்டைக்காக பண்ணை அமைக்க மற்றும் பாதுகாக்க செய்யப்படும் செலவுகள் கறிக்கோழி பண்ணைகள் அமைப்பதை காட்டிலும் கொஞ்சம் கூடுதல் செலவு பிடிக்கும் என்பதால் கொஞ்சம் அனுபவம் பெற்ற பெரிய நிறுவனங்களே முட்டைக்கோழி வளர்ப்பில் அதிக இலாபம் பார்க்கின்றன.