தென்னை நார்க்கழிவில் இருந்து தயாரிக்கப்படும் உரத்தில் எவ்வளவு சத்துகள் இருக்கு தெரியுமா?
தென்னையில் இருந்து கிடைக்கும் பொருட்களில் முக்கியமானது, தென்னங் கூந்தல் ஆகும். இதிலிருந்து நார் பிரித்து எடுக்கப்படுகிறது. இவ்வாறு பிரித்தெடுத்தலின் போது, மிகப்பெரிய அளவிலான எஞ்சிய நார் கழிவுகள் கிடைக்கின்றன. இவைகள் தென்னை நார் கழிவுகள் என்றழைக்கப்படுகின்றன.
நம் இந்திய தென்னை நார் தொழிற்சாலைகளிலிருந்து, 7.5 மில்லியன் டன் அளவிலான நார்கழிவுகள் என்றழைக்கப்படுகின்றன. நம் இந்திய தென்னை நார் தொழிற்சாலைகளிலிருந்து, 7.5 மில்லியன் டன் அளவிலான நார்க்கழிவுகள் ஆண்டுதோறும் கிடைக்கப்பெறுகிறது.
தமிழ்நாட்டில் இருந்து மட்டும் 5 லட்சம் டன் நார்க்கழிவுகள் கிடைக்கிறது. இதிலுள்ள மூலப்பொருள்களால், இது தோட்டக்கலையில் வளர்தளமாக பயன்படுகிறது.
அதிக விகிதத்திலான கரிமச்சத்து மற்றும் தழைச்சத்து மற்றும் குறைந்த அளவிலான உயிர் சிதைவு ஆகியவற்றால் தென்னை நார் கழிவு இன்றளவும் விவசாயத்திற்கு முக்கியமான கரிமச்சத்து மூலமாக கருதப்படவில்லை.
எனவே கரிமச்சத்து, தழைச்சத்து விகிதத்தை குறைப்பதற்கும், லிக்னின் மற்றும் செல்லுலோஸ் அளவை குறைப்பதற்கும், தென்னை நார்க்கழிவானது மட்க வைக்கப்படுகிறது.
இவ்வாறு மக்கச்செய்வதால் உரச்சத்து அதிகரித்து, அதிக அளவிலான நார்க்கழிவு குறைந்து, அதிலுள்ள சத்துக்களை தாவரங்கள் எடுத்துக் கொள்ளும் வகையில் மாறுகிறது.