நாட்டுக் கோழிகளில் எவ்வளவு இனங்கள் இருக்கு தெரியுமா?
நாட்டுக்கோழி இனங்கள்:
நம் இந்தியாவில் மட்டும் 18 கோழி இனங்கள் உள்ளன. அவற்றில் தமிழகத்தில் 7 கோழியினங்கள் உள்ளன.
குருவுக்கோழி, பெருவிடைக்கோழி, சண்டைக்கோழி அசில்கோழி, கடக்நாத் என்னும் கருங்கால் கோழி, கழுகுக்கோழி அல்லது கிராப்புக்கோழி என்னும் நேக்கட் நெக், கொண்டைக்கோழி, குட்டைக்கால் கோழி.
உயர்ரக நாட்டுக்கோழி இனம்
நந்தனம்கோழி ஆராய்ச்சி நிலையத்தில் நந்தனம் ஒன்று மற்றும் நந்தனம் இரண்டு என்ற இருவகை உயரினக்கோழிகள் உற்பத்தி செய்தனர்.
ஆந்திர மாநிலத்தில் வனராஜா என்ற உயரினக்கோழியை உற்பத்தி செய்தனர்.
பெங்களூருகால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத்தில் கிரிராஜா மற்றும் சுவர்ணதாரா என்னும் உயரினக் கோழிகளை உற்பத்திசெய்து புறக்கடை முறையில்கோழி வளர்ப்பதற்காக நமக்கு கொடுத்துள்ளனர்.