1. ஆடுகளை வாரச் சந்தையில் வாங்குவதைவிச் சிறந்த பண்ணைகளிலிருந்து வாங்குவது நல்லது. அதுவும் நோய்த் தாக்குதல் அறடற பண்ணைகளிலிருந்து வாங்குவது நல்லது. அருகே பண்ணைகள் இல்லாத சூழ்நிலையில் சில ஆடு வளர்ப்பவர்களிடம் வாங்கிச் சேர்க்கலாம்.

வெள்ளாட்டுக் குட்டிகள் பிறக்கும் போதே, முன் தாடையில் ஆறு வெட்டும் பற்கள் இருக்கும். ஆனால் கன்றுகளுக்கு இரண்டு பற்கள் மட்டுமே உண்டு. இரண்டு பல் வயதுள்ள ஆடுகளைத் தேர்ந்தெடுப்பதே சிறந்ததாகும்.

2. இளம் ஆடுகளையே வாங்க வேண்டும். நல்ல ஆடுகள் பத்து ஆண்டுகளுக்குப் பலன் கொடுக்கும். இளம் ஆடுகளைத் தேர்ந்தெடுக்கப் பல் பார்த்து வாங்க வேண்டும். பல் அடிப்படையில் வயது நிர்ணயிப்பது.

3 மாத வயது வரை — பால் பல்
1 1/2 வயது வரை — 2 பல்
2 வயது வரை — 4 பல்
3 வயது வரை — 6 பல்
4 வயது வரை — 8 பல்

3. பல குட்டிகள் போடும் ஆடுகளைத் தேர்ந்தெடுப்பது நல்லது. தாய் ஆடு, 3-4 குட்டிகள் போட்டால், அதன் பெண் குட்டியும் அவ்வாறே பல குட்டிகள் ஈனும். தமிழ் நாட்டின் பல பகுதிகளிலும் 3-4 குட்டிகள் ஈனும் ஆடுகளை வளர்ப்போர் சில ஊர்களில் இருக்கின்றார்கள். இவற்றைத் தேடி வாங்கலாம். இப்படி நான் வாங்கிய ஆடு முதல் ஈற்றில் மூன்று குட்டியைத் தாங்கியது.

4. போட்ட குட்டிகளைக் காக்கவும், வளர்ப்போருக்குச் சிறிது பால் கொடுக்கவும் ஏற்றதாக, நன்கு பால் வழங்கும் திறனுடைய பெட்டையாடாக இருக்க வேண்டும். நன்கு திரண்ட வளர்ச்சியடைந்த மடியுள்ள ஆடுகளைத் தேர்வு செய்ய வேண்டும். மடியில் பாதிப்புள்ளதா என்பதை நன்கு ஆய்வு செய்து வாங்க வேண்டும்.

5. மிருதுவான, பளபளப்பான தோல் கொண்ட ஆடுகளைத் தேர்வு செய்ய வேண்டும். இது ஆட்டின் உடல் நலத்தைக் காட்டும்.

6. சுறுசுறுப்புடன் அகன்ற ஒளியுடன் கூடிய கண்களை உடைய ஆடுகள் தேர்வு செய்யப்பட வேண்டும். இதுவும் ஆட்டின் நலத்தைக் காட்டுவதே.

7. முதுகுப் புறமும், பின் பகுதியும், அகன்று விரிந்து இருக்கும் ஆடுகள் சிறந்தவை. அகன்ற முதுகுப் புறமும் விலா எலும்பும் அதிக தீவனத்தை எடுக்கும் தன்மையையும், அகன்ற பின்புறம் சிறந்த இனப் பெருக்கக் குணத்தையும் காட்டுவனவாகும்.