Asianet News TamilAsianet News Tamil

மானாவாரி விவசாய முறையில் பயிரிடப்படும் ஆமணக்கு சாகுபடி தொழில்நுட்பங்கள்…

Cultivation techniques for castor cultivation
Cultivation techniques for castor cultivation
Author
First Published Aug 1, 2017, 12:34 PM IST


ஆமணக்கு ஒரு வெப்ப மண்டல ஒரு எண்ணெய் வித்து பயிராகும். பெரும்பாலும் மானாவாரி விவசாய முறையில் பயிரிடப்படுகிறது.

அதிகளவில் ஊடுபயிராக பயிரிடப்படுகிறது. வியாபார ரீதியில் பயிரிடும்போது தனிப்பயிராகவும் பயிரிடப்படுகிறது.

ஆமணக்கிலிருந்துதான் ஆமணக்கு எண்ணெய் ( சில பகுதிகளில் வெளக்கெண்ணெய் ) தயாரிக்கப்படுகிறது.

ஆமணக்கில் பல ரகங்கள் இருந்தாலும் தின்டிவனம் எண்ணெய் வித்து ஆராய்ச்சி நிலையம் வெளியிட்டுள்ள ரகங்கள் பிரபலமானவை. பாரம்பரிய ரகங்களும் அதிகம் பயிரிடப்படுகின்றன.

ஆமணக்கு பயிரிட்ட நான்கு மாதம் முதல் ஆறு மாதம் காலத்தில் அறுவடைக்கு வரும். வறட்சி நன்கு தாங்கி வளரும் பயிர். மானாவாரியில் பயிரிடும்போது சில நிலங்களில் எந்தவித பராமரிப்பும் இல்லாமலும் வளரும் தன்மை கொண்டது ஆமணக்கு.

நடவு செய்யும்பொழுது, இடைவெளி 3×3 அல்லது 3×4 அடி இருக்குமாறு நடவு செய்வது சிறப்பு. ஆமணக்கு பல பட்டங்களில் பயிரிடப்படிகிறது. தமிழகத்தில் ஆடி பட்டதில் பரவலாக அணைத்து மாவட்டத்திலும் பயிரிடப்படுகிறது.

ஆமணக்கு விதை நேர்த்தி செய்ய, 24 மணி நேரம் தண்ணீர் + கோமியம் கலவையில் ஊறவைத்து நடுவதால் ஆமணக்கில் விதை முளைப்பு திறன் அதிகரிக்கும்.

இயற்கை முறையில், உரமாக அமிர்த கரைசல் மட்டும் கொடுத்தால் போதும். ஆமணக்கில் பூச்சி தாக்குதல் அதிகம் காணப்படும். பெரும்பாலும் மற்ற பயிர்களை பூச்சிகள் தாக்க கூடாது என்பதற்காகவே ஊடுபயிராகவும், வரப்பு ஓரமும் ஆமணக்கு வளர்க்க படுகிறது. இதனால் ஆமணக்கில் பூச்சி தாக்குதல் அதிகம் இருக்கும்.

இயற்கை உரமான, கற்பூரகரைசல் தெளிப்பதன் மூலம் பூச்சிகளை முழுமையாக கட்டுப்படுத்தலாம். மீன் அமிலம் தெளித்தால் செடியில் வளர்ச்சி  நன்றாக இருக்கும்.

ஆமணக்கு பயிரிட்ட மூன்றாவது மாதம் முதல் பூக்கள் பூக்க ஆரம்பிக்கும். இருபத்தைந்து நாள்ஆன செடிகளுக்கு நுனி கிள்ளி விடலாம். நுனி கிள்ளி விடுவதால் அதிகமான பக்க கிளைகள் உருவாகும், இதனால் அதிகமான பூக்கள் மற்றும் காய்பிடிப்பு.

சில இடங்களில் பட்டுப்புழு வளர்க்க ஆமணக்கு இலைகளை பயன்படுத்துகின்றனர். அம்மானுக்கு மகசூல் ஏக்கருக்கு குறைந்த பட்சம் 200 கிலோ கிடைக்கும். பயிர் செய்த நான்காம் மாதம் முதல் ஆமணக்கு அறுவடை செய்யலாம்.

Follow Us:
Download App:
  • android
  • ios