நன்னீர் மீன்வளம்

நம் நாட்டில் நன்னீர் மீன்வளர்ப்பு சுமார் 13.67 கோடி ஹெக்டர் பரப்பளவில் வளர்க்கின்றனர். இதில் 2.25 கோடி ஹெக்டரில் குளங்கள் மற்றும் தொட்டிகள், 8.27 கோடி ஹெக்டர் நீர்நிலைகள் மற்றும் 3.15 கோடி ஹெக்டர் நீர்த்தேக்கங்கள் உள்ளன. 1990ல் குறிப்பிட முடியாத அளவிற்கு மீன் உற்பத்தி அதிகமாக இருந்தது.

நன்னீர் மீன் வளத்தில் உர மேலாண்மை

இந்தியாவில் அதிகப்படியாக நன்னீர் மீன்வளம் உயர்ந்து வருகிறது. மேலும் உற்பத்தியை அதிகரிக்க வேவ்வேறான மீன் வளங்களை திறமையாகக் கையாள வேண்டும். இதில் முக்கியமான ஒன்று குளத்தைப் பராமரித்து, தேவையான அளவு உரமிடுதலாகும். குளத்தின் பராமரிப்புகள், மண் மற்றும் நீரின் தரத்தை பொருத்ததே.

குளத்திற்கு உரமிடுதல்

மீன் குளத்தில் உணவு சுழர்ச்சியில் முதல் தேவையானவை தாவர நுண்ணுயிர் மிதவைகள். இந்த நுண்ணுயிர்கள் நீரைப் பச்சை நிறமாக மாற்றுகிறது. இதனால் நுண்ணுயிர்ப் பெருக்கம் அதிகரிக்கிறது. எனவே இருப்புச்செய்யும் மீன்களுக்கு இதுவே இயற்கை உரமாக அமைகிறது.

மாவுப்பொருள் தொகுப்புகளில் கரியமில வாயு, தண்ணீர் மற்றும் சூரிய ஒளி இருந்தாலும் மிதவை தாவர நுண்ணுயிர்களுக்கு கனிமச்சத்துக்கள் தேவைப்படுகிறது (தழைச் சத்து, மனிச்சத்து, சாம்பல்சத்து, சுண்ணாம்பு, கந்தகம், இரும்பு, தாமிரம், துத்தநாகம், மற்றும் மாங்கனீசு சத்துக்கள்) மிதவை தாவர நுண்ணுயிர்கள் வளர்வதற்க்கும் மற்றும் குளத்தின் உற்பத்தி திறனிற்கும் தேவையான சத்துக்கள் நீரில் இருக்க வேண்டும்.

மண் மற்றும் நீரின் மேலாண்மையை பொருத்தே குளத்தில் உள்ள இருப்பு மீன்களுக்கு, இயற்கை உணவு கிடைக்கும். இதனால் மீன்கள் நல்ல வளர்ச்சியடையும். குளத்தில் உள்ள நீருக்கு தேவையான சத்துக்கள் குளத்து மண்ணிலிருந்து கிடைக்கிறது.