சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வெட்டிவேரை சாகுபடி செய்வது தமிழகத்தில் அரிதாகவே நடக்கிறது.

வெட்டி வேர் சாகுபடிக்கு மணல் கலந்த செம்மண் பொருத்தமானது.

ஒரு ஏக்கரில் வெட்டி வேர் சாகுபடி செய்தால், வெட்டி வேரை மூலப்பொருளாக வைத்து, அழகு சாதனப் பொருட்கள், பற்பொடி, தண்ணீர் சுத்திகரிப்பு, பற்பொடி, பூஜை நறுமணப் பொருட்கள், மருத்துவத் தைலம், கோடைக் காலத்திற்கு ஜன்னல்களுக்கு வெட்டிவேர் தட்டி, கைவினைப் பொருட்கள் என்று 50க்கும் மேற்பட்ட மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றி சந்தைப்படுத்தலாம். இதில் இலாபமும் அள்ளும்.

ஒரு ஏக்கருக்கு ரூ.20 ஆயிரத்திலிருந்து, ரூ 25 ஆயிரம் வரை நாற்றுச் செலவாகும். தேவையான நாற்றுக்களை பெறுவதும் சுலபம்.

வாரம் ஒரு முறை தண்ணீர் வசதி அவசியம். உரம், பூச்சி மருந்து போன்றவை தேவையில்லை.

நாட்டுவகை, தரிணி என்று இருவகை வெட்டி வேரை சாகுபடி செய்யலாம்.

நாட்டு வகை ஒன்றரை ஆண்டும், தரிணி ஒரு ஆண்டும் சாகுபடி காலம் ஆகும்.

முதல் சாகுபடிக்கு மட்டுமே நாற்றுக்கள் தேவை. அதன் பின்னர் அதன் தண்டுகளை நாற்றுகளாக நடலாம்.

முதல் ஆண்டு பராமரிப்பு செலவு ரூ.70 ஆயிரம், அடுத்த ஆண்டுகளில் ரூ.30 ஆயிரமும் வரும். ஆண்டு வருமானமாக ஏக்கருக்கு ரூ 1.5 இலட்சம் கிடைக்கும். வேராகவும் எடுத்து விற்கலாம், அல்லது மதிப்பூட்டப்பட்ட பொருட்களாக மாற்றியும் விற்கலாம்,

எப்படி பார்த்தாலும் நமக்கு நல்ல இலாபம் கிடைக்கும்.