கன்று குட்டிகளை பராமரிப்பது என்பது சும்மா இல்லை. இவ்வளவு வழிகள் இருக்கு...
கன்று குட்டிகளை பராமரித்தல்
** புதிதாக பிறந்த கன்றை மிகவும் கவனமுடன் பாதுகாக்க வேண்டும்.
** தொப்புள் கொடியை கூர்மையான கத்தி கொண்டு வெட்ட வேண்டும். அதே சமயத்தில் நோய் தொற்று தாக்காமல் இருக்க அயேடின் சாராயக் கரைசல் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
** கன்றிற்கு சீம்பாலை கண்டிப்பாக தரவேண்டும்.
** கன்று பிறந்த 30 நமிடத்தில் முலைப்பாலூட்ட வேண்டும். கன்று மிகவும் தளர்ந்த நிலையில் இருந்தால் பால் குடிக்க உதவ வேண்டும்.
** கன்று பிறந்த உடனே முலைப்பால் குடிக்க மறுத்தால் பிறகு அதை குடிக்க வைப்பதற்காக முலைப்பாலை பக்கெட்டில் சேமிக்க வேண்டும்.
** கன்று பிறந்த 2 மாதத்திற்கு அதை தனியாக வறண்ட சுத்தமான மற்றும் நல்ல காற்றோட்டம் உள்ள பகுதியில் பராமரிக்க வேண்டும்.
** அதிகபடியான சீதோஷ்ண நிலையிலிருந்து கன்றை பாதுகாப்பாக பராமரிக்க வேண்டும். அதுவும் முதல் 2மாத கன்றை நன்கு பராமரிக்க வேண்டும்.
** கன்றுகளை அதன் பரிமாண அடிப்படையில் வகைப்படுத்த வேண்டும்.
** கன்றுகளுக்கு தடுப்பு மருந்துகளை தர வெண்டும்.
** கன்று பிறந்த 4-5 நாட்களுக்குள் அதற்கு கொம்பு வெட்டி சீர் செய்ய வேண்டும். வளர வளர அதை கையாளுவது சுலபமாக இருக்கும்.
** தேவைக்கு அதிகமாக வளர்க்க முடியாத கன்றுகளை அப்புறப்படுத்தி விட வேண்டும்.
** ஏதேனும் தனிப்பட்ட காரணத்திற்காக பராமரிக்க வேண்டியிருந்தால் பராமரிக்கவும்,குறிப்பாக காளை கன்றுகளை.
** பசு கன்றுகளை தகுந்த முறையில் வளர்க்க வேண்டும்.