மாடுகளை அதிகளவில் தாக்கி பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்தும் “சப்பை நோய்”…

Cabbage syndrome that causes large economic losses to hit cows
cabbage syndrome-that-causes-large-economic-losses-to-h


மாடுகளை அதிகளவில் தாக்கி பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்துவது சப்பை நோய் (BLACK QUARTER) என்னும் தொற்றுநோய்.

அறிகுறிகள்:

1.. இந்நோய் கண்ணுக்கு தெரியாத குளோஸ்டிரிடியம் சாமோசிஸ் எனும் நுண்ணுயிர் கிருமியால் பரவும் ஒரு தொற்று நோய். 

2.. நல்ல சதைப்பற்றுள்ள இளம் மாடுகளை இந்நோய் அதிக அளவில் தாக்கி பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்துகின்றது.

3.. அதிக காய்ச்சல்

4.. முன்காலி சப்பை மற்றும் பின்கால் சப்பை ஆகியவற்றில் சூடான வீக்கம்.
வீக்கத்தை அழுத்தும் போது நறநறவென சப்தம் கேட்கும்.

5.. கால் நொண்டும், நடக்க சிரமப்படும்.

6.. நோய்கண்ட மாடுகள் ஒரு சில நாட்களில் இறக்கும் வாய்ப்பு அதிகம்.

நோய் பரவும் முறைகள்:

1.. நோயினை ஏற்படுத்தும் நுண்ணுயிர் கிருமிகளின் ஸ்போர்ஸ் எனப்படும் வித்துக்கள் மேய்ச்சல் தரையில் காணப்படும். மழைக் காலங்களில் ஏற்படும் சாதகமான சூழ்நிலையில் கால் நடைகள் மேயும்போது இவ்வித்துக்கள் உடலினுள் நுழைந்து நோய்க்கிருமிகளாக மாறி நோயினை ஏற்படுத்தும்.  நோய்க் கிருமிகள் நோய்ப்பட்ட மாடுகளின் சாணத்தில் மூலம் வெளியேறி மேய்ச்சல் தரைகளில் பரவும்.

நோய் தடுப்பு முறைகள்:

1.. நோய் கண்ட மாடுகளுக்கு உடனடியாக கால்நடை மருத்துவரைக் கொண்டு தக்க சிகிச்சை அளித்தால் இறப்பைத் தவிர்க்கும் வாய்ப்பு உள்ளது.

2. மழைக்காலத்திற்கு முன் கால்நடைகளுக்கு தடுப்பூசிபோட்டுக் கொள்வதே
நோயினைத் தடுக்கும் சிறந்த வழியாகும்.

3. நோய் பரவியுள்ள இடங்களிலிருந்து கால்நடைகளை வாங்கி வருவதைத் தவிர்க்க வேண்டும்.

4. நோயுற்ற கால்நடைகளை மற்ற கால்நடைகளை மற்ற கால்நடைகளுடன் சேர்க்காமல் பிரித்து வைக்க வேண்டும்.

5. நோயினால் இறக்கும் கால்நடைகளை அழமான குழிகளைத் தோண்டி புதைக்க வேண்டும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios