முதலில் தங்கள் குடும்பத்திற்கு தேவையான காய்கறிகளை பூர்த்தி செய்து கொண்டு, பின்னர் அளவுக்கு அதிகமாக உள்ளவற்றை விற்கவும் அல்லது பண்டம் மாற்றி கொள்ளவும் செய்யலாம்.

சில சமயங்களில், வருமானம் ஈட்டுவதே காய்கறி தோட்டத்தின் முதன்மையான நோக்கம் ஆகிவிடுகிறது.

எந்த சமயத்திலும் ஒரு நல்ல ஊட்டச்சத்தின் அவசியத்தை மனதில் கொள்ள வேண்டும். ஏனெனில் ஊட்டச்சத்தும், வருவாய் ஈட்டுவதும் ஒன்றோடு ஒன்று தொடர்பு உடையனவாகும்.

காய்கறி மற்றும் வருமானம் ஆகிய இரண்டு ஆதாயங்களும் வீட்டு  காய்கறி தோட்டத்தில் கிடைக்கிறது.

வீட்டில் பராமரிக்கப்படும் கால்நடைக்கு தேவையான தீவனமும் மற்றும் ஏனைய வீட்டு உபயோகத்திற்கு தேவைப்படும் விறகு போன்ற மூலப்பொருட்களும் கிடைக்கின்றன.