கால்நடைகளுக்கான அற்புதமான புரதச்சத்து உணவு “அசோலா”. ஏன்?

Azolla is a wonderful protein food for animals. Why
Azolla is a wonderful protein food for animals. Why?


அசோலா

** கால்நடைகளுக்கு ஒரு அற்புதமான புரதச்சத்து உணவு அசோலா. மனிதருக்கும் கூட இது அற்புதமான புரதச்சத்து. 

** இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் அசோலா இப்போது வளர்க்கப்படுகிறது.தமிழில் மூக்குத்தி மற்றும் கம்மல் செடி என்று அழகாக பெயர் வைத்தும் அழைக்கப்படுகிறது.

** எப்போதும் கிடைக்கும் பசுந்தீவனங்கள் இல்லாதபோது அசோலா வளர்த்து கால்நடைகளுக்கான பசுந்தீவன தேவையை சமாளிக்கலாம்.

** அசோலா  தண்ணீரில் மிதந்து வளரும் ஒரு சிறிய பெரணி வகைத் தாவரம்.

** வட்ட வடிவ சிறிய இலைகளை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி வைத்த்து போல் இருக்கும் இதன் இலைகள் 3-4 செ.மீ. அளவு இருக்கும்.

** தண்டு  மற்றும் வேர்பகுதி நீரினுள் மூழ்கி இருக்கும்.

** இலையின் மேற்பரப்பில் உள்ள ஹெட்டிரோசைட் எனப்படும் வெற்றிடத்தில் அன்பீனா அசோலா என்ற நீலப்பச்சைப்பாசி வளிமண்டலத்தில் உள்ள நைட்ரஜனை எடுத்து அசோலாவில் சேமிக்கின்றது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios