அசோலாவை கால்நடைகளுக்குப் பயன்படுத்துதல்

** ஒரு பக்கெட்டில் பாதியளவு தண்ணீரை எடுத்து அறுவடை செய்த அசோலாவை அதனுள் இடவும். சாணத்தின் வாசணை போகும் வரை நன்கு க.ழுவவும். இதனால் வேர்கள் தனியாக பிரிந்து விடும். இலை மட்டும் மிதக்கும்.அதனை சேகரித்து வழக்கமாக கால்நடைகளுக்கு கொடுக்கலாம்.

** வாரம் ஒரு முறை அசோலா பாத்தியிலிருந்து 20%தண்ணீரை எடுத்து விட்டு புதியதாக தண்ணீரை விடவும்.

   ** அசோலாவி ல்புரதம், அமினோ  அமிலங்கள்,  வைட்டமின்கள், கால்சியம்,  பாஸ்பரஸ், பொட்டசியம், இரும்பு, தாமிரம், மெக்னீசியம் மற்றும் வளர்ச்சி ஊக்கிகள் அதிகம் உள்ளன.

** உலர்ந்த நிலையிலுள்ள அசோலாவில் புரத சத்து - 25-35 %,தாதுக்கள் - 10-15% மற்றும் அமினோ அமிலங்கள் - 7-10 %உள்ளன.

** அசோலாவின் செரிக்கும் தன்மை கால்நடைகளில் மிகவும் நன்றாக  இருக்கிறது.

** அசோலாவை தனியாகவும் அல்லது அடர்தீவனத்துடன் கலந்தும் கால்நடைகளுக்கு கொடுக்கலாம்.

** செம்மறியாடுகள், வெள்ளாடுகள், பன்றிகள், கோழிகள் மற்றும் முயல்களுக்கும் தீவனமாக அளிக்கலாம்.

** எளிதில் ஜீரணிக்கவல்ல அசோலா கால்நடைகள், கோழிகள், பன்றிகள், ஆடுகள் மற்றும் மீன் ஆகியவற்றிற்கு சிறந்த உணவாக அமைகிறது.