எந்த பயிர்கள் எல்லாம் களர் மண்ணில் வளரும்?

agricultural tips-GJWKNG


கோ-43 மற்றும் பையூர் இரக நெல், கோ-11, கோ-12, கோ-13 ஆகிய கேழ்வரகு இரகங்கள் அதிக அளவு களர் தன்மையைத் தாங்கி வளரக்கூடியவை.

கோ-24, கோ-25 இரக சோளம், பழைய பருத்தி இரகங்கள் (எம்.சி.யூ), கோ-5, கோ-6 இரக கம்பு, கோ-சி, 671 ஆகிய கரும்பு இரகங்கள் மிதமான களர் நிலங்களில் நன்றாக வளர்பவை.

இவை தவிர, சூரியகாந்தி, சௌண்டல் (சூபாபுல்), வேலிமசால், குதிரைமசால், வரகு, கொய்யா, இலந்தை, கருவேல், வேலிக்கருவேல், வேம்பு, சவுக்கு ஆகியவையும் களர் தன்மையை தாங்கி வளர்கின்றன.

பீன்ஸ், நிலக்கடலை, மக்காச்சோளம், மொச்சை, எலுமிச்சை ஆகியவற்றை களர்நிலங்களில் பயிரிடக்கூடாது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios