Asianet News TamilAsianet News Tamil

எனது வாழ்நாளில் இவரை ஒருபோதும் பிரதமராக நியமிக்க போவதில்லை...! அதிபர் திட்டவட்டம்

பதவி நீக்கம் செய்யப்பட்ட ரணில் விக்ரமசிங்கேவை ஒருபோதும் பிரதமர் பதவியில் மீண்டும் நியமிக்க முடியாது இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Will Never Reappoint Ranil Wickremesinghe...Maithripala Sirisena
Author
Sri Lanka, First Published Nov 26, 2018, 11:04 AM IST

பதவி நீக்கம் செய்யப்பட்ட ரணில் விக்ரமசிங்கேவை ஒருபோதும் பிரதமர் பதவியில் மீண்டும் நியமிக்க முடியாது இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். Will Never Reappoint Ranil Wickremesinghe...Maithripala Sirisena

இலங்கையில் கடந்த அக்டோபர் 26-ம் தேதி பிரதமர் பதவியில் இருந்து ரணிலை அதிரடியாக சிறிசேனா நீக்கினார். நாடாளுமன்றத்தை முடக்கி புதிய பிரதமராக முன்னாள் அதிபர் ராஜபக்சேவை நியமனம் செய்தார். ராஜபக்சே மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஆதரவு வலுத்தது. ராஜபக்சேவுக்கு பெரும்பான்மை கிடைக்காத சூழல் நிலவி வந்தது. இதனால் இலங்கை அரசியலில் கடும் குழப்பம் நீடித்து வந்தது. Will Never Reappoint Ranil Wickremesinghe...Maithripala Sirisena

இந்நிலையில் திடீரென நாடாளுமன்றத்தை கலைக்க சிறிசேனா அறிவித்தார். இதனை எதிர்த்து அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிபரின் நடவடிக்கைக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து கூட்டப்பட்ட இலங்கை நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட குரல் ஓட்டெடுப்பில் ராஜபக்சே தோல்வி அடைந்ததாக சபாநாயகர் கரு ஜெயசூர்யா அறிவித்தார். ஆனால் ஓட்டெடுப்பை ஏற்க சிறிசேனா மறுப்பு தெரிவித்துள்ளார். Will Never Reappoint Ranil Wickremesinghe...Maithripala Sirisena

இந்நிலையில் இது தொடர்பாக அதிபர் சிறிசேனா நேற்று கூறுகையில்;- நான் மீண்டும் ரணில் விக்ரமசிங்கேவை பிரதமராக நியமிப்பேன் என்பதற்கு சாத்தியமே கிடையாது என அதிரடியாக கூறியுள்ளார். எனக்கும், ரணிலுக்கும் அரசின் அணுகுமுறையில் தீவிரமான கொள்கை வேறுபாடு உள்ளது. ஆகையால் ரணிலுடன் என்னால் இணைந்து செயல்பட முடியாது என்றார். எனது வாழ்நாளில் ரணிலை ஒருபோதும் பிரதமராக நியமிக்க போவதில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios