Asianet News TamilAsianet News Tamil

இலங்கையில் சற்று முன்... இதயங்களை உலுக்கியெடுத்த காட்சிகள்...!

இலங்கையில் நேற்று நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் பலியான 300-க்கும் மேற்பட்டவர்கள் உடல்களை  சவப்பெட்டியில் எடுத்து கொண்டு பொதுமக்கள் நீண்ட வரிசையாக செல்லும் காட்சிகள் காண்போர் இதயங்களை உலுக்கி எடுத்து வருகிறது. 

Sri Lanka blasts...300 people kills
Author
Sri Lanka, First Published Apr 22, 2019, 4:20 PM IST

இலங்கையில் நேற்று நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் பலியான 300-க்கும் மேற்பட்டவர்கள் உடல்களை  சவப்பெட்டியில் எடுத்து கொண்டு பொதுமக்கள் நீண்ட வரிசையாக செல்லும் காட்சிகள் காண்போர் இதயங்களை உலுக்கி எடுத்து வருகிறது.Sri Lanka blasts...300 people kills

ஈஸ்டர் பண்கையையொட்டி, நேற்று இலங்கையில் பல்வேறு தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்று கொண்டிருந்த சமயத்தில் 3 தேவாலயங்கள் மற்றும் 4 நட்சத்திர விடுதிகள் உள்ளிட்ட 8 இடங்களில் குண்டுகள் வெடித்தன. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 400-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமங்களுடன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். Sri Lanka blasts...300 people kills

சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இந்த கோர தாக்குதல்களில் இந்தியர்கள், அமெரிக்கா, டென்மார்க், சீனா, பாகிஸ்தான், மொராக்கோ, இந்தியா, வங்காளதேசம் ஆகிய வெளிநாடுகளை சேர்ந்த 35 பேர் உயிரிழந்துள்ளனர். Sri Lanka blasts...300 people kills

இந்த குண்டுவெடிப்பு சம்பவங்கள் அனைத்தும் மனித வெடிகுண்டு தாக்குதல் என அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த கொடூரமான குண்டுவெடிப்பு சம்பவத்தில் இதுவரை கைது செய்யப்பட்டுள்ள வேன் டிரைவர் உள்ளிட்ட 24 பேரும் நேஷனல் தவ்ஹீத் ஜமா அத் என்னும் இஸ்லாமிய தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இந்த குண்டுவெடிப்பில் வெளிநாட்டு சதி இருக்கிறது. இந்த சதி இல்லாமல் இவ்வளவு பெரிய குண்டுவெடிப்பு சம்பவத்தை நடத்த முடியாது என்று கூறப்படுகிறது. மேலும் குண்டுவெடிப்பு சம்பவங்களில் பலியான உடல்களை சவப்பெட்டியில் வைத்து நீண்ட வரிசையில் பொதுமக்கள் தோளில் சுமந்து கண்ணீருடன் எடுத்து செல்லும் காட்சிகள் காண்பவர்களை கலங்க வைத்துள்ளது.

 Sri Lanka blasts...300 people kills

இது தொடர்பாக இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’ இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் அவசர நிலை பிரகடனம் செய்யப்படுகிறது. முக்கிய நகரங்களில் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்படுகிறது. நாட்டின் தற்போதைய நிலையில் முப்படை வீரர்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்படுகிறது. நாளை தேசிய துக்க தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது’’  எனத் தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios