Asianet News TamilAsianet News Tamil

2019 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு ! மருத்துவத் துறைக்கு 3 பேருக்கு அறிவிப்பு !!

2019-ம் ஆண்டிற்கான மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Noble prize announced  for medical
Author
Stockholm, First Published Oct 7, 2019, 10:41 PM IST

ஆண்டுதோறும் 6 பிரிவுகளின் கீழ் தகுதியானவர்களை தேர்ந்தெடுத்து நோபல் பரிசுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் 2019-ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் இன்று முதல் அறிவிக்கப்படுகின்றன.

முதல் நாளில் மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்படுகிறது. நாளை இயற்பியல் துறைக்கும், நாளை மறுதினம் வேதியியல் துறைக்கும் பரிசுகள் அறிவிக்கப்படும். வரும் வியாழக்கிழமை இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட உள்ளது.  கடந்த ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்படாததால் இந்த ஆண்டு இரண்டு நோபல் பரிசுகள் அறிவிக்கப்படுகின்றன.

Noble prize announced  for medical

1901-ம் ஆண்டு முதன்முதலில் 5 பிரிவுகளின் கீழ் நோபல் பரிசு வழங்கப்பட்டது. இதையடுத்து 1969 ஆம் ஆண்டு ரிக்ஸ் வங்கி நன்கொடையாக அளித்த பணத்தைக் கொண்டு நோபல் பட்டியலில் பொருளாதாரத்துக்கான பரிசும் சேர்க்கப்பட்டது.

Noble prize announced  for medical

இந்நிலையில் சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில்,  2019-ம் ஆண்டிற்கான மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் வில்லியம் ஜி.கேலின், சர் பீட்டர் ரேட் கிளிப், கிரேக் எல்.செம்ன்ஸா ஆகியோருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

மனித உடல் செல்கள் குறித்த ஆய்வுக்காக 3 பேருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios