Asianet News TamilAsianet News Tamil

காதலியுடன் உல்லாசமாக இருந்த வீடியோவை வெளியிட்ட காதலன்! ரூ.40 கோடி நஷ்டஈடு பெற்ற பெண்!

Lover who released a video with a girlfriend Rs 40 crore compensated woman
Lover who released a video with a girlfriend Rs 40 crore compensated woman
Author
First Published Apr 14, 2018, 1:39 PM IST


அவரசப்பட்டு காதலியை மிரட்டி பணம் பறிக்க  ஆபாச புகைபடத்தை இணையத்தில் வெளியிட்ட காதலன் பாதிக்கப்பட்ட காதலிக்கு ரூ.40 கோடி நஷ்டஈடு கொடுக்க வேண்டும் என்று கோர்ட்டு  அதிரடி உத்தரவிட்டுள்ளது.அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்த பெண் ஜேன் டோயே. இவர் டேவிட் கே இலாம் என்பவரை காதலித்தார். கடந்த 2013-ம் ஆண்டு இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர்.

இருவரும் காதலிக்கும்போது சில நேரங்களில் தனிமையில் உல்லாசம் அனுபவித்துள்ளனர். மேலும் காதலியை ஆபாசமாக புகைப்படம் எடுத்துள்ளார். இந்நிலையில் காதலியை பழி வாங்கும் நடவடிக்கையாக புகைப்படத்தை ஜேனின் ஆபாச போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை ஆபாச பட வெப்சைட்டில் டேவிட் வெளியிட்டார்.
இவரை துயரம் மிகுந்த வாழ்க்கைக்கு தள்ளி தற்கொலை செய்ய வைப்பேன் என்றும் மிரட்டி வந்தார். இதனையடுத்து தான் தற்கொலை செய்யப்போவதில்லை உன்னிடமே பணம் பறிக்கிறேன் பார் என அதுகுறித்து கலிபோர்னியா கோர்ட்டில் ஜேன் வழக்கு தொடர்ந்தார்.

இச்சம்பவம் கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்றது. இந்த வழக்கை வழக்கை விசாரித்த கோர்ட்டு பாதிக்கப்பட்ட ஜேனேவுக்கு அவரது காதலன் டேவிட் ரூ.40 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. சமீப காலங்களில் பழி வாங்கும் நடவடிக்கைக்காக செக்ஸ் போட்டோக்கள் வெளியீடு தொடர்பாக அதிக நஷ்டஈடு தொகை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.இதற்கு முன்பு 2017-ம் ஆண்டில் சீட்டில் பகுதியில் நடந்த இது போன்ற வழக்கில் பாதிக்கப்பட்டவருக்கு ரூ.60 கோடி நஷ்டஈடு வழங்க கோர்ட்டு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios