Asianet News TamilAsianet News Tamil

மூன்று குழந்தைகள் பெற்றால் இலவச நிலம்... அரசு அதிரடி அறிவிப்பு!

இத்தாலியில் 3 குழந்தைகள் பெற்றால் இலவச நிலம் வழங்கப்படும் என்ற புதிய திட்டத்தை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இத்தாலியில் மக்கள் தொகையை அதிகரிக்கும் பொருட்டு இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Italian Goverement...Three Children birth Land gift
Author
Italy, First Published Nov 2, 2018, 3:25 PM IST

இத்தாலியில் 3 குழந்தைகள் பெற்றால் இலவச நிலம் வழங்கப்படும் என்ற புதிய திட்டத்தை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இத்தாலியில் மக்கள் தொகையை அதிகரிக்கும் பொருட்டு இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. Italian Goverement...Three Children birth Land gift

ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. எனவே அந்த நாடுகள் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றன. ஐரோப்பிய நாடுகளிலேயே இத்தாலியில் பிறப்பு விகிதம் மிகவும் பின் தங்கியுள்ளது. கடந்த ஆண்டு அந்த நாட்டில் 4 லட்சத்து 66 ஆயிரம் குழந்தைகள் மட்டுமே பிறந்துள்ளன. Italian Goverement...Three Children birth Land gift

ஆனால் முதியவர்கள் 60 சதவீதத்துக்கும் அதிகமானோர் உள்ளனர். இதனைக் கருத்தில் கொண்டு அந்நாட்டில் இளைய  இளைய தலைமுறையினரின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், மக்கள் தொகையை உயர்த்தவும் அதிரடி திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. 

அதன்படி இத்தாலியில் 3 குழந்தை பெறுபவர்களுக்கு இலவச மகா நிலம் அளிக்கப்படும் என்று  அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தாலியில் சமீபத்தில் எடுத்த புள்ளி விவரத்தின்படி, சுமார் மூன்று லட்சம் குடும்பத்தினர் இரண்டு குழந்தைகளுடன் உள்ளனர். மேலும் இவர்கள் இனி குழந்தை பெற்றுக்கொள்ளக் கூடாது என்று முடிவு செய்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. Italian Goverement...Three Children birth Land gift

மேலும், கடந்த 2017-ம் ஆண்டின் பிறப்பு விகிதத்தின் படி இத்தாலியில் கடந்த ஆண்டு 4 லட்சம் குழந்தைகள் பிறந்துள்ளன. இது 2016-ம் ஆண்டை விட 2% குறைவு. எனவே குழந்தைகள் பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios