Asianet News TamilAsianet News Tamil

சக்தி வாய்ந்த நிலநடுக்கம்... பொதுமக்கள் பீதி..!

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.8-ஆக பதிவாகியுள்ளது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். 

Earthquake in Andaman Islands
Author
Andaman Islands, First Published Mar 11, 2019, 10:30 AM IST

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.8-ஆக பதிவாகியுள்ளது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். 

அந்தமான் நிகோபார் தீவுப் பகுதிகளில் அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை 6.44 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அந்தமான் தீவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.8-ஆக பதிவாகியுள்ளது. எனினும், இதனால் உயிர்சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. Earthquake in Andaman Islands

முன்னதாக, பிப்ரவரி 28-ம் தேதி அந்தமான் நிகோபார் தீவில் காலை 5.30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.8-ஆக பதிவானதாக தெரிவிக்கப்பட்டது. அதற்கும் முன்னதாக, பிப்ரவரி 13-ம் தேதி பேம்பூ பிளாட் உள்ளிட்ட சில பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகளில் 4.5-ஆக என பதிவானது. இதேபோல் பசுபிக் பெருங்கடலில், நியூசிலாந்து நாட்டுக்கு வடமேற்குப் பகுதியில் உள்ள ஃபிஜி  தீவுப் பகுதியில் நேற்று மதியம்  6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

Follow Us:
Download App:
  • android
  • ios