Asianet News TamilAsianet News Tamil

உன்னை வன்புணர்வு செய்ய மாட்டேன், பெண் எம்பியிடம் பேசிய அதிபர்... அமேசான் காடு குறித்து மீண்டும் சர்ச்சைப் பேச்சு..!!

அமேசான் மனிதக்குலத்தின் பொக்கிஷம் என்ற தவறான புரிதல் மக்களிடம் உள்ளது. அது போல அமேசான் காடு இவ்வுலகத்தின் நுரையீரல் என்ற தவறான கருத்தும் நிலவுகிறது" என்று கூறினார் .

brazil president bolsonaro again and again senseless talking
Author
London, First Published Sep 26, 2019, 8:50 AM IST

அமேசான் காடு தீக்கிரையாகப்படவில்லை, அது இவ் உலகத்தின் நுரையீரலும் இல்லை , வேண்டும் என்றே சர்வதேச ஊடகங்கள் அதை ஊதி பெரிதாக்கிவிட்டனர் என்று பிரேசில் அதிபர் சயீர் பொல்சனாரு பகிரங்கமாக தெரிவித்துள்ளார். அவரின் பேச்சு, மீண்டும் வேதாளம் மரம் ஏறிவிட்டது என்று விமர்சிக்கப்படுகிறது. யார் இந்த பொல்சனாரூ அவர் எப்படிபட்டவர்.??

brazil president bolsonaro again and again senseless talking

ஒரு பெண்ணை எம்பியை பார்த்து நான் உன்னை வன்புணர்வு செய்ய மாட்டேன் ஏனென்றால் நீ அதற்கு தகுதி இல்லை என்று ஒரு தலைவர் சொன்னால் அவரை பற்றி  என்ன நினைப்போம் அந்த தலைவரே அந்தாட்டின் அதிபரும் ஆகிவிட்டால் அதுதான் இப்பொழுது பிரேசிலில் நடந்திருக்கிறது... சர்ச்சைக் கருத்துக்களால் மட்டுமே பிரபலமடைந்து  பிரேசில் நாட்டு அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றவர் சயீர் பொல்செனாரூ.

brazil president bolsonaro again and again senseless talking

பெண்கள், கருப்பினத்தவர், பாலியல் சிறுபான்மையினர்களைப் பற்றி மிக மோசமான தடாலடியான கருத்துகளை சொல்லி பிரபலமடைந்தவர் செயீர் பொல்சனாரூ  குறிப்பாக ஆணுக்கு கொடுக்கிற ஊதியத்தை போல பெண்களுக்கு கொடுத்து நான் வேலைக்கு எடுக்க மாட்டேன் ஏனென்றால் அவர்கள் கருத்தரிப்பார்கள் என்று அவர் சொன்ன கருத்து கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இப்படிபட்ட அதிபர்தான் மீண்டும் ஒரு சர்ச்சை கருத்தை கூறியிருக்கிறார். brazil president bolsonaro again and again senseless talking

அமேசான் காடு உலகின் நுரையீரல் இல்லை எனப் பிரேசில் அதிபர் சயீர் பொல்சனாரூ ஐ.நாவில் தெரிவித்துள்ளார். ஐ.நா சபையில் நடந்த வருடாந்திர கூட்டத்தில் பேசும் போது அவர் இவ்வாறு கூறினார். "அமேசான் ஒன்றும் தீக்கிரையாக்கப்படவில்லை. சர்வதேச சமூகம் நேரில் வந்து பார்த்துக்கொள்ளலாம்" என்று குதர்க்கமாக பேசியுள்ளார் பொல்சனாரூ,

brazil president bolsonaro again and again senseless talking

அமேசான் குறித்து உலக சமூகத்திடம் தவறான புரிதல் உள்ளது என்றார். இதன் காரணமாக அவர்கள் குதர்க்க வாதம் செய்கிறார்கள் என்றார் அதிபர் பொல்சனாரூ "அமேசான் மனிதக்குலத்தின் பொக்கிஷம் என்ற தவறான புரிதல் மக்களிடம் உள்ளது. அது போல அமேசான் காடு இவ்வுலகத்தின் நுரையீரல் என்ற தவறான கருத்தும் நிலவுகிறது" என்று கூறினார் .பொல்சனாரூ அரசு அமேசான் காட்டை பாதுகாக்கத் தவறிவிட்டது. காட்டழிப்பை ஊக்குவிக்கிறது என சூழலியலாளர்கள் குற்றஞ்சாட்டி வரும் சூழலில் அவர் இவ்வாறாக உரையாற்றி உள்ளார்.சர்வதேச ஊடகங்களையும் பொல்சனாரூ ஐ.நாவில் குற்றஞ்சாட்டினார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios