Food

இந்த உணவுகளை ஒருபோதும் இரும்பு கடாயில் சமைக்காதீங்க..!!

Image credits: Getty

இரும்பு கடாய்

இரும்பு கடாயில் சமைப்பது இந்திய பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக இருந்தாலும், சில குறைபாடுகளும் இதில் உள்ளன.
 

Image credits: Getty

தீங்கு விளைவிக்கும் இரும்பு கடாய்

இரும்பு கடாயில் சமைக்க கூடாத சில உணவுகள் உள்ளன. ஏனெனில் அவை எதிர் வினைகளை தூண்டும் மற்றும் சுவையைக் கெடுத்து விடும்.
 

Image credits: Getty

தக்காளி

இது இயற்கையில் அமிலத்தன்மையை கொண்டுள்ளதால் எதிர் வினையை தூண்டி, உலோகத்தை உணவில் கசிய செய்யலாம். இதனால் உணவில் உலோக சுவை தான் வரும்.
 

Image credits: Getty

முட்டை

இதிலிருக்கும் கந்தகம் இரும்புடன் வினைபுரிந்து சுவையற்ற சுவையை தரும். கந்தகமும், இரும்பும் எதிர்வினை என்பதால் இவை இரண்டையும் ஒன்றாக சேர்க்க வேண்டாம்.
 

Image credits: Getty

மீன்

மீனில் இருக்கும் அமிலம் இரும்புடன் வினைபுரிந்து கடாயில் ஒட்டிக்கொண்டு அதன் சுவை மற்றும் அமைப்பை மாற்றும்.

Image credits: Getty

பாஸ்தா

இரும்பு கடாயில் பாஸ்தா சமைப்பது ஆரோக்கியம் அல்ல. குறிப்பாக தக்காளி சாஸ் சேர்த்து பாஸ்தா சமைக்கும்போது தக்காளியின் அமிலத்தன்மை இரும்புச்சத்து வினையை ஏற்படுத்தும்.

Image credits: Getty
Find Next One