Asianet News TamilAsianet News Tamil

இந்தியாவுக்கு பெருமை சேர்த்த தக் ஷா குழுவின் புதிய சாதனை! சென்னை டிரேட் சென்டரில் வைக்கப்பட்ட ஏர்-டாக்ஸி !

சென்னை அண்ணாபல்கலைகழக மாணவர்களின் தக் ஷா குழு அடுத்தடுத்த கண்டுபிடிப்புகளால் விமான தொழில் நுட்பவியல் துறை மாணவர்களுக்கு புதிய நம்பிக்கை  அளிக்கும் வகையில் தற்போது ஏர் டாக்சி முதலீட்டாளர்கள் சந்திப்பு மாநாத்தில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
 

Air taxi show at Chennai Trade center
Author
chennai, First Published Jan 23, 2019, 8:40 PM IST

சென்னை அண்ணா பல்கலைகழகத்தில்,  நடிகர் அஜீத்குமாரை தொழில் நுட்ப வழிகாட்டியாக கொண்ட தக் ஷா மாணவர் குழு இந்தியாவில் முதல் முறையாக ட்ரோன் மூலம் வானில் பறக்கும் ஏர் டாக்சியை தயாரித்தது.

ட்ரோன் மூலம் வானில் பறக்கும் இத்தகைய ஏர் டாக்சியை கடந்த வருடம் துபாய், அறிமுகப்படுத்திய போது இந்த வசதியெல்லாம் நம் நாட்டிற்கு வர இன்னும் 20 ஆண்டுகளாவது ஆகும் என்று எண்ணியோர் பலர் இருக்கலாம். ஆனால் ஒரே ஆண்டில் அந்த சாதனை  அண்ணா பல்கலை கழக மாணவர்களால் முறியடிக்கப்பட்டது. 

அஜீத் குமாரை தொழில் நுட்ப வழிகாட்டியாக கொண்ட இந்த மாணவர் குழு ஏற்கனெவே ஏர் ஆம்புலன்ஸ் ஒன்றை வடிவமைத்து சாதனை படைத்தது. இந்த ஏர் ஆம்புலன்ஸ் சென்னையில் இருந்து வேலூர் வரை சென்று வரும் வல்லமை மிக்கது. போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் உடல் உறுப்புதானத்துக்கு உதவும் வகையில் இந்த ஏர் ஆம்புலன்ஸ் வடிமைத்து கொடுக்கப்பட்டது.

அதே பாணியில் 80 கிலோ எடை கொண்ட மனிதர்களை தூக்கிச்செல்லும் திறனுடன், 20 கிலோ மீட்டர் சுற்றளவில் எளிதாக பறந்து செல்லும் வகையிலான "ஏர் டாக்சி" ஒன்றை இந்தியாவிலேயே முதன் முறையாக நடிகர் அஜித்தின் தக் ஷா மாணவர் குழு வடிவமைத்துள்ளது.  

Air taxi show at Chennai Trade center

வடிவமைப்பில் முழுமையடையாத இந்த ஏர். டாக்சியை தமிழக அரசின் நிதி உதவியுடன் இருக்கை மற்றும் மேற்கூறையுடன் சிறிய ரக கார் போல வடிமைத்து வானில் பறக்கும் டாக்சியாகவும், ஆபத்து காலங்களில் உயிருக்கு போராடும் நபர்களை ஏற்றி மருத்துவமனைகளுக்கு விரைவாக கொண்டு செல்லும் ஏர் ஆம்புலன்சாகவும் இதனை பயன்பாட்டுக்கு கொண்டு வர தக் ஷா மாணவர் குழு திட்டமிட்டுள்ளதாகவும் செய்தி வெளியானது.

நடிகர் அஜீத் குழுவினர் தயாரித்த "ஏர் டாக்ஸி" மக்கள் பயன் பாட்டிற்கு தயார் நிலையில் உள்ளது. தற்போது பொதுமக்கள் பார்வைக்காக.. "முதலீட்டாளர்கள் சந்திப்பு மாநாடு" நடைபெறும்,சென்னை நந்தப்பாக்கம் டிரேட் சென்டரில் கண்காட்சி அரங்கம் முன்பாக " ஏர் டாக்ஸி" வைக்கப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios