Asianet News TamilAsianet News Tamil

பொறையார் விபத்து எதிரொலி - பணிமனைகளில் உள்ள பழமையான கட்டடங்களை அகற்ற வேண்டி ஆர்ப்பாட்டம்…

The demonstration to remove the old buildings in the workshops ...
The demonstration to remove the old buildings in the workshops ...
Author
First Published Oct 21, 2017, 8:22 AM IST


அரியலூர்

நாகப்பட்டினம் மாவட்டம் பொறையார் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையில் ஏற்பட்ட விபத்தால் தொழிலாளர்கள் உயிரிழந்ததன் விளைவாக பணிமனைகளில் உள்ள பழமையான கட்டடங்களை அகற்ற வேண்டும் என்று அரியலூரில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

அரியலூர் மாவட்ட போக்குவரத்துக் கழக பணிமனையில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்றுக்கோரி தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு நடைப்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தொழிலாளர் முன்னேற்றச் சங்கத் தலைவர் கனகராஜ் தலைமை வகித்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், “நாகப்பட்டினம் மாவட்டம் பொறையார் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையில் பழமையான கட்டடம் இடிந்து விழுந்ததில் ஊழியர்கள் 8 பேர் உயிரிழந்தனர்.

இச்சம்பவத்தை கண்டித்தும், அரசுப் போக்குவரத்து கழக பணிமனைகளில் உள்ள பழமையான கட்டடங்களை அகற்றி புதியக் கட்டடங்களை கட்ட வேண்டும்.

கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்” உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்தில் செயலர் சட்டநாதன், சிஐடியு மாவட்டத் தலைவர் அன்பழகன், விடுதலைச் சிறுத்தைகள் கிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios