Asianet News TamilAsianet News Tamil

20 சதவீதம் தீபாவளி போனஸ் கேட்டு தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்…

Tea plantation workers fight for 20 percent Diwali bonus
Tea plantation workers fight for 20 percent Diwali bonus
Author
First Published Oct 9, 2017, 8:16 AM IST


நீலகிரி

20 சதவீதம் தீபாவளி போனஸ் கேட்டு சோலையாறு குரூப் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீலகிரி மாவட்டம், வால்பாறையில் உள்ள சோலையாறு குரூப் தேயிலை தோட்டங்களில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர்.

2016-17-ஆம் ஆண்டிற்கு 9.50 சதவீதம் போனஸ் தொகையை எஸ்டேட் நிர்வாகத்தினர் தொழிலாளர்கள் வங்கிக் கணக்கில் செலுத்தி உள்ளனர். போனஸ் தொகைக்கான பிரதிகளை தொழிலாளர்களிடம் தோட்ட அதிகாரிகள் நேற்று முன்தினம் காலை கொடுத்துள்ளனர்.

இந்த நிலையில், “தங்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும்.

போனஸ் சதவீதம் குறித்து முன்கூட்டியே தொழிலாளர்களுக்கு நிர்வாகச் சட்டப்படி தெரிவிக்கவில்லை” என்றுக் கூறி நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலைக்குச் செல்லாமல் தொழிற்சாலை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த வால்பாறை காவலாளர்கள் போராட்டக் களத்திற்கு சென்று எஸ்டேட் பொதுமேலாளர் வந்தபின் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணலாம் என்று கூறி தொழிலாளர்களை கலைந்துச் செல்ல செய்தனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios