Asianet News TamilAsianet News Tamil

ஐயகோ...தேர்தலை முன்னிட்டு இத்தனை நாளா டாஸ்மாக்கை இழுத்து மூடுவாங்க பாஸ்?...

இந்தியக் குடிமக்கள் வானிலை அறிக்கையை விட அதிக ஆர்வமுடன் தெரிந்துகொள்ள ஆர்வமாக இருப்பது இந்த ‘நீர்நிலை’ அறிக்கையைத்தான். அதாகப்பட்டது வரும் பாராளுமன்ற, சட்டசபை இடைத் தேர்தல்களை முன்னிட்டு நான்கு நீண்ட நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் இழுத்து மூடப்படவிருக்கின்றன மகா ஜனங்களே.

tasmaac closing for 4 days
Author
Chennai, First Published Apr 5, 2019, 9:10 AM IST

இந்தியக் குடிமக்கள் வானிலை அறிக்கையை விட அதிக ஆர்வமுடன் தெரிந்துகொள்ள ஆர்வமாக இருப்பது இந்த ‘நீர்நிலை’ அறிக்கையைத்தான். அதாகப்பட்டது வரும் பாராளுமன்ற, சட்டசபை இடைத் தேர்தல்களை முன்னிட்டு நான்கு நீண்ட நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் இழுத்து மூடப்படவிருக்கின்றன மகா ஜனங்களே.tasmaac closing for 4 days

இந்திய தேர்தல் ஆணையம் அனைத்து மாநில அரசுகளுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில், ‘வாக்குப்பதிவு முடியும் வரை உள்ள 48 மணி நேரங்களுக்கு மதுபான கடைகள் அடைக்கப்பட வேண்டும். அதேபோல், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளிலும் அதே 48 மணி நேரத்துக்கு  மதுக்கடைகளை அடைக்க வேண்டும்’ என கூறி இருந்தது.

அதேபோல், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை கமிஷனர், ‘வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை நாட்களில் மதுபானம் உற்பத்தி செய்யவோ, விற்கவோ, எடுத்து செல்லவோ கூடாது’ என்று தமிழ்நாடு மாநில நுகர்பொருள் வாணிப கழகம், இந்தியாவில் வெளிநாட்டு மதுபானம், பீர் மற்றும் ஒயின் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழக அரசு இதற்கு ஏற்ப நடவடிக்கை எடுக்க முடிவு செய்து இருக்கிறது. தமிழ்நாட்டில் மிகவும் சுதந்திரமான, நியாயமான, அமைதியான முறையில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்கள் நடத்த வேண்டும் என்ற வகையில் வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை நாட்களில் மது பானங்கள் விற்பனை செய்ய தடை விதித்தும், பார்களை மூடவும் அரசு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.tasmaac closing for 4 days

இந்த உத்தரவுக்கு ஏற்றவகையில் தமிழ்நாடு மாநில நுகர்பொருள் வாணிப கழகத்தின் மேலாண்மை இயக்குனர் ஆர்.கிர்லோஷ் குமார் பிறப்பித்துள்ள உத்தரவில் ...தமிழக அரசின் உத்தரவுக்கு ஏற்ப தேர்தலையொட்டி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மதுபான கடைகளும், அதோடு இணைக்கப்பட்டுள்ள பார்களும் வருகிற 16, 17, 18 ஆகிய நாட்களிலும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான மே மாதம் 23-ந்தேதியும் மூடப்படும்.
இந்த உத்தரவுப்படி அனைத்து மதுபான டெப்போக்கள், கடைகள் மற்றும் பார்கள் மேற்சொன்ன நாட்களில் அடைக்கப்பட வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

சம்பவத்துக்கு இன்னும் பத்து நாள் இருக்கிறதால டென்சன் ஆகாம 4 நாளுக்கு ஸ்டாக் வைக்கணும்னா எவ்வளவு தேவைப்படும் எங்க ஸ்டாக் வைக்கிறதுன்னு நிறுத்தி நிதானமா யோசிங்க மக்கழே...

Follow Us:
Download App:
  • android
  • ios