Asianet News TamilAsianet News Tamil

நான்கு நாட்கள் இரவு பகல் பாராமல் மீட்புப் பணியில் இருந்த அமைச்சர்கள் ! சோகத்துடன் சுஜித் உடலுக்கு அஞ்சலி !!

சிறுவன் சுஜித் ஆள்துளைக் கிணற்றுக்குள் விழுந்த அன்று இரவு முதல் இன்று வரை தூங்காமல் மீட்புப் பணிகளில் ஈடுபட்ட அமைச்சர்கள் விஜய பாஸ்கர், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் பெரும் சோகத்துடன் சுஜித் உடலுக்கு அஞ்கலி செலுத்தினர்.

sujith pay homage
Author
Trichy, First Published Oct 29, 2019, 7:34 AM IST

திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித்தை மீட்கும் பணிகள் கடந்த 4 தினங்களாக நடைபெற்று வந்தது. 

sujith pay homage

80 மணி நேரத்திற்கும் மேலாக மீட்பு பணிகள் நடைபெற்ற நிலையில், சுஜித் சடலமாகவே மீட்கப்பட்டான்.   பின்னர், அந்த உடல் ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறை அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

sujith pay homage

மணப்பாறை அரசு  மருத்துவமனையில் உடற்கூறாய்வு  நடைபெற்றது.  உடற்கூறாய்வுக்கு பின் சுஜித்தின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. 
மணப்பாறை அரசு மருத்துவமனையில் வைத்து, குழந்தை சுஜித் உடலுக்கு, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் , வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்ட அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து, சுஜித்தின் உடல் , நடுக்காட்டுப்பட்டி அருகில் உள்ள பாத்திமா புதூரில் உள்ள கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது.

Follow Us:
Download App:
  • android
  • ios