Asianet News TamilAsianet News Tamil

ஜோசியம் சொன்ன வயதான பெரியவரை செருப்பால் மாறி மாறி அடித்த சப்-இன்ஸ்பெக்டர்! அலறித் துடித்த கொடுமை!

Sub inspector has been heavily attacked by an Old man
Sub inspector has been heavily attacked by an Old man
Author
First Published May 21, 2018, 5:23 PM IST


"ம்ஹும்... ஒன்னும் கிடைக்காது... நிலைமை கொஞ்சம் சிக்கலாதான் இருக்கும், நீ நினைக்கிற மாதிரி எல்லாம் ஈசியா எதுவும் நடக்காது என குறி சொன்ன வயதான பெரியவரை  எமனேஸ்வரம் சப்-இன்ஸ்பெக்டர் செருப்பால் மாறி மாறி  அடித்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

முனியசாமிக்கு, ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு அதிகம் இருப்பதால் கோயில்-குளம் என சுற்றி வருவாராம். ஜோசியத்திலும் முனியசாமிக்கு அதிக நம்பிக்கையாம், யார் எங்கே ஜோசியம் சொன்னாலும் உடனே அங்கு முனிய சாமியை பார்க்க முடியுமாம். குறி கேட்பது என்றால் அலாதி பிரியமாம். அதிலும் வயதானவர்கள் குறி சொன்னால், தன்னிலை மறந்து அங்கு போய் ஆஜராகிவிடுவாராம். தனக்கு சாதகமாக யாராவது குறி சொன்னால் போதும் சப்-இன்ஸ்பெக்டர் உச்சிமகிழ்ந்து போவாராம். அதெல்லாம் இருக்கட்டும் அவருக்கு எதிராக குறி சொல்லிவிட்டால், சொல்பவர் நிலைமை எப்படியிருக்கும் தெரியுமா? வாங்க பார்க்கலாம்...

Sub inspector has been heavily attacked by an Old man

கடந்த சில நாட்களுக்கு முன்பு பரமக்குடி டவுன் ஏரியாவில் வயதானவர் ஒருவர் குறி சொல்லி பிழைப்பை நடத்திக் கொண்டிருந்தார். இந்த விஷயம் எமனேஸ்வரம் சப்-இன்ஸ் முனியசாமி தெரியவே, அடுத்த நிமிடமே அங்கு ஆஜரானார்.

அப்போது வயாதான பெரியவரிடம் கையை காட்டி முனியசாமி, "நான் இன்னும் கொஞ்சம் நாளில் ஓய்வு பெற போறேன்.. எனக்கு பணி சம்பந்தமாக வரவேண்டிய பணமெல்லாம் சரியாக வந்துவிடுமா? அதற்கு பிறகு என் எதிர்காலம் எப்படி இருக்கும்" என குறி கேட்டுள்ளார்.

சப்-இன்ஸ் கையை பார்த்த கையை பார்த்த அந்த பெரியவர், "ம்ஹும்... உனக்கு ஒன்னும் கிடைக்காது... இப்போ  நிலைம கொஞ்சம் சிக்கலா இருக்கு, நீ நினைக்கிற மாதிரி அவ்ளோ  ஈசியா நடக்காது" என சொன்னார். 

இதனால் ஆத்திரம் உச்சிக்கு சென்ற அந்த சப்-இன்ஸ் வயதானவர் என்றும் பார்க்காமல், தன்னுடைய செருப்பை கழட்டி சரமாரியாக அடிக்க தொடங்கிவிட்டார். அடியின் வலி தாங்க முடியாமல் அந்த பெரியவர் அலறி அடித்து கொண்டு ஓடினார். இதனையெல்லாம் அங்கிருந்த மக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். சிலர் இதனை தங்களது செல்போனில் படம் பிடிக்க தொடங்கிவிட்டனர். அத்துடன் இந்த காட்சிகளையெல்லாம் சமூகவலைதளங்களில் உலவ விட்டுள்ளனர். வயதானவரை இப்படி கண்மூடித்தனமாக ஆத்திரம் தீர தாக்கிய முனியசாமி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கருத்துக்களையும் பதியவிட்டு வருகின்றனர். 

Sub inspector has been heavily attacked by an Old man

இதே முனியசாமி கடந்த ஆண்டு பரமக்குடியில் நடந்த கோவில் விழா திருவிழாவிற்கு பாதுகாப்புக்காக சென்றுள்ளார். அது கோயில் விழா என்பதால் பக்தி பாடல்களுடன் பாட்டு கச்சேரி நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த முனியசாமி, திடீரென்று கச்சேரி மேடையில் போலீஸ் உடையுடன் ஏறி, மைக்கை பிடித்து பாட்டுக் கட்செரிக்ககவே உருவாக்கப்பட்ட (ராத்திரி நேர கில்மா பாடல்களை) சினிமா துள்ளல் பாடல்களை பாட ஆரம்பித்துவிட்டார். அப்போது அந்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டது, அங்கிருந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பெரும் சங்கடத்தையும் கொடுத்தது.

Follow Us:
Download App:
  • android
  • ios