Asianet News TamilAsianet News Tamil

தஞ்சாவூரில் 23 ஊராட்சிகளில் இன்று சிறப்பு கிராம சபைக் கூட்டம்; பங்கேற்குமாறு ஆட்சியர் அழைப்பு…

Special Village Gathering Meeting in 23 Panchayats in Thanjavur The collector call to attend ...
Special Village Gathering Meeting in 23 Panchayats in Thanjavur The collector call to attend ...
Author
First Published Oct 11, 2017, 7:06 AM IST


தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டத்தில் 23 ஊராட்சிகளில் மட்டும் இன்று சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற இருக்கிறது. இதில், பங்கேற்று ஒத்துழைப்பு தருமாறு ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை நேற்று செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார்.

அதில், “தஞ்சாவூர் ஒன்றியத்தில் சூரக்கோட்டை, மாரியம்மன் கோயில், பூதலூர் ஒன்றியத்தில் இந்தலூர், மனையேறிப்பட்டி, திருவையாறு ஒன்றியத்தில் சாத்தனூர், செம்மங்குடி, ஒரத்தநாடு ஒன்றியத்தில் ஆதனக்கோட்டை, திருவோணம் ஒன்றியத்தில் காரியாவிடுதி, அக்கரைவட்டம்,

கும்பகோணம் ஒன்றியத்தில் உள்ளூர், கொத்தங்குடி, திருவிடைமருதூர் ஒன்றியத்தில் கீரனூர், சாத்தனூர், திருப்பனந்தாள் ஒன்றியத்தில் கீழ்மாத்தூர், பாபநாசம் ஒன்றியத்தில் சரபோஜிராஜபுரம், துரும்பூர், அம்மாபேட்டை ஒன்றியத்தில் வையச்சேரி, பட்டுக்கோட்டை ஒன்றியத்தில் செம்பாளூர்,

வீரக்குறிச்சி, மதுக்கூர் ஒன்றியத்தில் வாட்டாக்குடி உக்கடை, வாட்டாக்குடி வடக்கு, பேராவூரணி ஒன்றியத்தில் துறவிக்காடு, மடத்திக்காடு ஆகிய ஊராட்சிகளில் அக்டோபர் 11 (அதாவது இன்று) சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது.

இந்தக் கூட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து சமூகத் தணிக்கை மேற்கொள்வது தொடர்பாக விவாதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.

எனவே, இதில் மக்கள், சுய உதவிக் குழுவினர் பெருமளவில் கலந்துகொண்டு ஒத்துழைப்பு தரவேண்டும்” என்று அதில் குறிப்பிட்டு இருந்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios