Asianet News TamilAsianet News Tamil

டெங்கு கொசு ஒழிப்பு பணியை மேற்கொள்ளாத பள்ளிகளுக்கு ரூ.15 ஆயிரம் அபராதம்; சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிரடி ...

Rs 15 thousand fine for schools that do not perform dengue mosquito work
Rs 15 thousand fine for schools that do not perform dengue mosquito work
Author
First Published Oct 24, 2017, 6:39 AM IST


கன்னியாகுமரி

நாகர்கோவிலின் நகராட்சிப் பணியில் சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆய்வில் இருந்தபோது டெங்கு கொசு ஒழிப்புப் பணியை மேற்கொள்ளாத இரண்டு பள்ளிகளுக்கு ரூ.15000 அபராதம் விதிக்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் நகரத்தில் டெங்கு பாதிப்பு அதிகமாக இருப்பதால் நகராட்சி ஆணையர் சரவணகுமார், சுகாதாரத் துறை அதிகாரிகள் உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தார்.

“வீடுகள், வணிக நிறுவனங்கள், பள்ளிகள் என அனைத்து பகுதிகளிலும் தீவிர ஆய்வு மேற்கொள்ள வேண்டும்” என்றார். அதிலும் குறிப்பாக “டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் தண்ணீர் தேங்கி கிடக்கும் நிறுவனங்களுக்கு உடனடியாக அபராதமும் விதிக்கப்பட வேண்டும்” என்றும் உத்தரவிட்டார்.

அதன்படி, புன்னைநகர் பகுதியில் நேற்று நாகர்கோவில் நகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அப்போது அப்பகுதியில் உள்ள பள்ளியில் டெங்கு கொசுப் புழுக்களுடன் கழிவறை உள்ளிட்டவைகளில் தண்ணீர் தேங்கி நின்றிருந்தது. இதனையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்தப் பள்ளிக்கு ரூ.10000 அபராதம் விதித்தனர்.

இதேபோல் வெட்டூர்ணிமடம் பகுதியில் ஒரு தனியார் பள்ளியில் செடித் தொட்டி உள்ளிட்டவைகளில் தேங்கியிருந்த தண்ணீரில் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகி இருந்ததால் அந்தப் பள்ளி நிர்வாகத்திற்கு ரூ.5000 அபராதம் விதிக்கப்பட்டது.

நாகர்கோவில் நகராட்சியில் வணிக நிறுவனங்கள், வீடுகள், பள்ளிகள் உள்ளிட்டவைகளுக்கு கடந்த மூன்று மாதங்களில் மட்டும் ரூ.68 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாம்.

Follow Us:
Download App:
  • android
  • ios