Asianet News TamilAsianet News Tamil

முகேஷ் அம்பானி வீட்டில் ஆதரவாளர்களுடன் தர்மயுத்தம் ஓ.பி.எஸ்..!

இந்தியாவின் மிக ஆடம்பர நடைபெற்ற முகேஷ் அம்பானியின் இல்லத் திருமணத்தில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்றது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

panneerselvam go to mukkesh ambani home with the supporters
Author
Chennai, First Published Dec 15, 2018, 4:12 PM IST

இந்தியாவின் மிக ஆடம்பர நடைபெற்ற முகேஷ் அம்பானியின் இல்லத் திருமணத்தில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்றது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

panneerselvam go to mukkesh ambani home with the supporters

அனைவரையும் வாயடைக்க வைக்கும் வகையில் மிக ஆடம்பரமாக கடந்த 12ம் தேதி முகேஷ் அம்பானி மகள் இஷா அம்பானிக்கும், ஆனந்த் பிராமலுக்கும் திருமணம் மும்பையில் நடைபெற்றது. இதற்காக முகேஷ் அம்பானியின் ஆண்டில்லா பங்களாவில் உலக நட்சத்திரங்கள் முதல் உள்ளூர் விஐபிகள் வரை பலரும் பங்கேற்றனர். பாலிவுட் பிரபலங்கள், அமெரிக்க பாப் பாடகி பேயான்ஸ், முன்னாள் அமெரிக்க அதிபர் கிளிண்டனின் மனைவி ஹிலாரி, கிரிக்கெட் வீரர்கள் பாஜக பிரமுகர்கள் எனப் பலரும் பங்கேற்றனர்.  ஆசியாவிலேயே முதன்முறையாக 100 மில்லியன் டாலர் செலவில் நடைபெற்ற இந்தத் திருமணத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, முன்னாள் பிரதமர் தேவகவுடா, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ரவிசங்கர் பிரசாத், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, மேற்கு வங்க மம்தா பானர்ஜி, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

panneerselvam go to mukkesh ambani home with the supporters

12ம் தேதி பிறந்த நாள் கொண்டாட வேண்டிய ரஜினி தனது ரசிகர்களைக் கூட சந்திப்பதை தவிர்த்துவிட்டு தனது மனைவி லதாவுடன் இந்த திருமணத்தில் கலந்து கொண்டார். இது அவரது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் பங்கேற்றார். தமிழகத்தில் இருந்து ரஜினி, ப.சிதம்பரம், மு.க.ஸ்டாலின் ஆகிய மூவர் மட்டுமே கலந்து கொண்டதாக கருதப்பட்ட நிலையில், தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் தனது ஆதரவாளர்கள் சிலருடன் பங்கேற்றுள்ள புகைப்படங்கள் வெளியாகி வருகின்றன. அவர்கள் முகேஷ் அம்பானியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

 

Follow Us:
Download App:
  • android
  • ios