Asianet News TamilAsianet News Tamil

வட கிழக்கு பருவமழை தொடங்கும் தேதியை அறிவித்தது வானிலை ஆய்வு மையம்… இயல்பை விட மழை வெளுத்து வாங்கும்… மகிழ்ச்சி செய்தி !!

வட கிழக்கு பருவமழை இப்போ தொடங்கும், அப்போ தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் கடந்த 10 நாட்களுக்கு மேலாக சொல்லிவந்த நிலையில், தற்போது வரும் 26 ஆம் தேதி வட கிழக்கு பருவமழை தொடங்கும் என்றும் இந்த ஆண்டு இயல்பைவிட இந்த ஆண்டு கூடுதலாக மழை வெளுத்து வாங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

north east moonson will start 26th oct
Author
Chennai, First Published Oct 22, 2018, 6:24 AM IST

தென்மேற்கு பருவமழை, கடந்த மே  மாதம்  29 ஆம் ஆண்டு தொடங்கி  நாடு முழுவதும் பரவலாக கொட்டித் தீர்த்தது. கேரளாவில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவு மழை கொட்டித் தீர்த்தது.

இந்நிலையில் தோன் மேந்கு பருவமழை நேற்றுடன் முடிவடைந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  இதையடுத்து  முக்கியமான, வடகிழக்கு பருவ மழை, வரும் 26 ஆம் தேதி தொடங்கும் என  இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

north east moonson will start 26th oct
தமிழகத்திற்கு முக்கிய நீராதாரமாக விளங்கும், இந்த பருவமழை, இயல்பான அளவான, 44 செ.மீ.,க்குபதிலாக, 12 சதவீதம் கூடுதலாக, 49 செ.மீ., வரை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில், நீர்நிலைகளில்,முன்பை விட, 17 சதவீதம் அதிக நீர் இருப்பு உள்ளது. பருவமழை பெய்யும் போது, நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளதாக, மத்திய நீர்வள ஆணையம் தெரிவித்துள்ளது.

north east moonson will start 26th oct

பருவமழை தொடங்க , இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில், பருவமழை விபத்துகளை தடுக்க, முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படி, பள்ளிகள் உட்பட, அரசு துறைகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரி,  வடக்கு அந்தமானில் ஒரு காற்றழுத்த தாழ்வு உருவாகி உள்ளது. மேலும் அது நகரும் திசையை பொறுத்து மழை இருக்கும் என தெரிவித்தார்.
north east moonson will start 26th oct

தற்போது தென்மேற்கு வங்க கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் மழையோ, இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். ஒருசில இடங்களில் கன மழைக்கும் வாய்ப்பு உண்டு. சென்னை நகரை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் மழையை எதிர்பார்க்கலாம் என்றும் கூறினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios