Asianet News TamilAsianet News Tamil

ஒரே வார்த்தையில் CBCIDயை  அலறவிட்ட நிர்மலா தேவி... அப்படி என்னத்த சொன்னாரு இந்த புரோக்கர் பேராசிரியை?

nirmala devi said i cannot say the 10 years long story in one day
nirmala devi said i cannot say the 10 years long story in one day
Author
First Published Apr 19, 2018, 4:32 PM IST


மாணவிகளை பாலியல் ரீதியாக பெரிய மனிதர்களுக்கு கட்டிலுக்கு அனுப்ப முயற்சித்ததால் கைதாகி சிறையில் இருக்கும் நிர்மலா தேவி 10 ஆண்டு கால கதையை ஒரே நாளில் சொல்லிவிட முடியாது என்று கூறி போலீசாரை அலறவிட்டுள்ளார்.

அருப்புக்கோட்டை மகளிர் போலீஸ் நிலையத்தில் நிர்மலா தேவியிடம் விசாரணை நடத்திய ஆவணங்கள் சிபிசிஐடி போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன. அதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் உள்ளன. நிர்மலா தேவி அளித்த வாக்குமூலத்தில் 10 ஆண்டு கால கதையை ஒரே நாளில் சொல்லிவிட முடியாது என்று கூறியுள்ளார். இதை கேட்டு போலீஸார் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

nirmala devi said i cannot say the 10 years long story in one day

பேராசிரியை நிர்மலா தேவி, விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணிதப் பேராசிரியை நிர்மலா மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் உயரதிகாரிகளுடன் ஆசைக்கு இணங்க கல்லூரி மாணவிகள் 4 பேரிடம் தொலைபேசியில் புரோக்கராக பேசி சிக்கிய ஆடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த கைதான நிலையில், பின்னர் விருதுநகர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதியின் வீட்டில் நிர்மலா ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து அவரை ஏப்ரல் 28-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 

nirmala devi said i cannot say the 10 years long story in one day

நிர்மலா தேவி விவகாரத்தை அருப்புக்கோட்டை நகர காவல் நிலையத்திலிருந்து சிபிசிஐடி விசாரணைக்கு தமிழக டிஜிபி ராஜேந்திரன் உத்தரவிட்டார். இதையடுத்து பேராசிரியை பணியாற்றிய அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியில் 5 பேர் கொண்ட சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில், நிர்மலா தேவி 2008-ஆம் ஆண்டில் கல்லூரியில் உதவி பேராசிரியையாக சேர்ந்தார். அப்போது மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு பல்வேறு பணிகளுக்காக அவர் சென்று வந்தபோது தொலைநிலைக் கல்வி இயக்ககத்தில் 2 பேராசிரியர்களுடன் பணி ரீதியில் நிர்மலாவுக்கு பழக்கம் உருவானது. இந்தபழக்கம் நாளாடைவில் இறுக்கமானது.

nirmala devi said i cannot say the 10 years long story in one day

இந்நிலையில் தான் கடந்த மாதம் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு பேராசிரியர்களுக்கான புத்தாக்கப் பயிற்சிக்காக அவர் சென்றுள்ளார். அப்போது அந்த இரு பேராசிரியர்களின் தூண்டுதலின் பேரிலேயே மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்துள்ளார். விரைவில் இதுதொடர்பாக அந்த இரு பேராசிரியர்கள் விசாரணை வளையத்துக்குள் சிக்குவார்கள் எனத்தெரிகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios