Asianet News TamilAsianet News Tamil

அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் கனமழை - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்தின் 11 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணிநேரத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
 

next 24 hours heavy rain in tamilnadu
Author
Chennai, First Published Nov 23, 2018, 1:00 PM IST

தமிழகத்தின் 11 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணிநேரத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

ஏற்கனவே கஜா புயலால் பாதிக்கப்பட்டு நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர் உள்பட 7 மாவட்டங்கள் கடும் சேதம் அடைந்துள்ளன. இதனால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதுடன் உடமைகளை இழந்து தவிக்கின்றனர்.

next 24 hours heavy rain in tamilnadu

மின் இணைப்பு, குடிநீர், பால், உணவு எதுவும் இல்லாமல் உள்ளனர். அரசு மற்றும் சமூக ஆர்வலர்கள் பலர் தொண்டு நிறுவனங்கள் மூலம் உதவி பொருட்களை வழங்கி வருகின்றனர். ஆனாலும், அவர்களது நிலை இதுவரை சீராக வில்லை.

இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாது.

next 24 hours heavy rain in tamilnadu

அடுத்த 24 மணி நேரத்தில் வடதமிழகத்தில்  பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளது. தென்தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும்.

விழுப்புரம், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, நாமக்கல், நீலகிரி, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கரூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும். அதே நேரத்தில் புதுச்சேரியிலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் இடைவெளி விட்டு சிலமுறை மிதமான மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios