Asianet News TamilAsianet News Tamil

லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு அதிரடி தடை... எடப்பாடிக்கு பின்னடைவு... ஓங்கும் ஸ்டாலின் கை!

புதிய தலைமைச் செயலக வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாற்றிய அரசாணையை சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்துள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

new chief secretariat case... chennai high court Verdict
Author
Chennai, First Published Dec 13, 2018, 11:21 AM IST

புதிய தலைமைச் செயலக வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாற்றிய அரசாணையை சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்துள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஓமந்தூர் அரசினர் தோட்டத்தில் திமுக ஆட்சி காலத்தில் புதிய தலைமைச் செயலக கட்டிடம் கட்டப்பட்டது. இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக கூறி கடந்த 2011-ம் ஆண்டு ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.ரகுபதி தலைமையில் விசாரணை ஆணையத்தை அமைத்து அப்போதைய முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். new chief secretariat case... chennai high court Verdict

இந்த ஆணையத்துக்கு எதிராக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கை விசாரித்த விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், விசாரணை ஆணையம் என்பதே கண்துடைப்பு நாடகம் என்று கருத்து தெரிவித்தார். பின்னர் ரகுபதி ஆணையத்தை கலைத்தார். அதன் அறிக்கையை பரிசீலித்து தேவைப்பட்டால் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிடவேண்டும் என்று நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் தீர்ப்பு வழங்கினார். new chief secretariat case... chennai high court Verdict

இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணைக்கு உத்தரவிட்டு தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதி புஷ்பா சத்யநாராயணா முன்னிலையில் விசாரிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். new chief secretariat case... chennai high court Verdict

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதில் புதிய தலைமைச் செயலக வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாற்றிய அரசாணையை சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்துள்ளது. இந்த வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறை ஒப்புடைத்து ஸ்டாலினுக்கு பல்வேறு நெருக்கடிகளை தர அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால் உயர்நீதிமன்ற தீர்ப்பால் அரசுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios