Asianet News TamilAsianet News Tamil

கோடநாடு கைது விவகாரம்.. தமிழக நிருபர் மீது மேத்யூ சாமுவேல் பாய்ச்சல்..!

கோடநாடு கைது விவகாரத்தில் தமிழகத்தைச் சேர்ந்த தொலைக்காட்சி நிருபர் ஒருவர் மீது தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் குற்றம் சாட்டியிருக்கிறார்.

Kodanad murder case issue...mathew samuel slam Tamil reporter
Author
Tamil Nadu, First Published Jan 14, 2019, 12:56 PM IST

கோடநாடு கைது விவகாரத்தில் தமிழகத்தைச் சேர்ந்த தொலைக்காட்சி நிருபர் ஒருவர் மீது தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் குற்றம் சாட்டியிருக்கிறார்.

கோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் ஆகியோர் தனிப்படை போலீஸாரால் டெல்லியில்  கைது செய்யப்பட்ட நிலையில், அதை கடத்தல் என்று மேத்யூ சாமுவேல் கண்டித்து கருத்து வெளியிட்டிருந்தார். அதே வேளையில், இந்த கைதுக்கு தமிழகத்தைச் சேர்ந்த தொலைக்காட்சி நிருபர் ஒருவர் உதவி செய்ததாக தனது முகநூல் பக்கத்தில் மேத்யூ பதிவிட்டிருந்தார்.Kodanad murder case issue...mathew samuel slam Tamil reporter

அந்தப் பதிவில், “ நாங்கள் எங்கே உட்கார்ந்திருக்கிறோம் என்பதை  தொலைகாட்சி நிருபர் தமிழ்நாடு காவல்துறைக்கு வழிகாட்டியிருக்கிறார். நான் வீட்டுக்கு போனதையும் அவர் காவல்துறைக்கு உறுதி செய்திருக்கிறார். அவர் மீது  சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி நிறுவனம் நடவடிக்கை எடுக்கும் வரை அவரை தமிழக மக்கள் புறக்கணிக்க வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.Kodanad murder case issue...mathew samuel slam Tamil reporter

மேத்யூவின் குற்றச்சாட்டுக்கு அந்தத் தொலைக்காட்சி நிருபரும் உடனடியாக மறுப்பு தெரிவித்துள்ளார். “கைது விவகாரத்தில் காவல்துறையினருக்கு அவர்களுடைய இடத்தை நான் சொன்னதாக கூறுவது முற்றிலும் தவறு. சயானும் மனோஜூம் கைது செய்யப்பட்டது பற்றி மேத்யூ சாமுவேல் எனக்கு வாட்ஸ்அப் மூலம் தெரிவித்த பிறகே எனக்கு தெரியவந்தது.  என்னைப் பற்றி தவறாக வெளியிட்ட நிலைத்தகவலை அகற்ற வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.

Follow Us:
Download App:
  • android
  • ios