Asianet News TamilAsianet News Tamil

ஜாக்டோ-ஜியோ ஸ்டிரைக் தற்காலிகமாக ஒத்திவைப்பு!

நாளை முதல் நடைபெறவிருந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் வேலைநிறுத்த போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Jacto-Geo struggle Temporarily Adjourned
Author
Tamil Nadu, First Published Dec 3, 2018, 2:05 PM IST

நாளை முதல் நடைபெறவிருந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் வேலைநிறுத்த போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதை ஜாக்டோ-ஜியோ அமைப்புகளின் நிர்வாகிகள் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தெரிவித்துள்ளனர். நீதிபதிகள் யோசனையை ஏற்று வேலை நிறுத்த போராட்டத்தை ஒத்திவைத்துள்ளனர். Jacto-Geo struggle Temporarily Adjourned

முன்னதாக அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு குழுவான ஜாக்டோ-ஜியோ பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தனர். இந்நிலையில் மதுரை சேர்ந்த வழக்கறிஞர் லோகநாதன் என்பவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

Jacto-Geo struggle Temporarily Adjourned

 அந்த மனுவில் நாளை முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடபோவதாக ஜாக்டோ -ஜியோ அறிவித்துள்ளது. அடுத்த வாரம் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு நடைபெற உள்ள நிலையில், ஜாக்டோ-ஜியோ ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவர். மேலும் கஜா புயல் பாதித்த பகுதிகளில் நிவாரணப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த பணிகளிலும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே ஜாக்டோ-ஜியோ போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். இந்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது. Jacto-Geo struggle Temporarily Adjourned

இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஜாக்டோ ஜியோ போராட்டத்தை வரும் 10-ஆம் தேதி வரை ஒத்திவைக்க முடியுமா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். நீதிபதிகளின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ஜாக்டோ-ஜியோ அமைப்புகளின் நிர்வாகிகள் வேலைநிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios