Asianet News TamilAsianet News Tamil

கவனமா இருங்க… மாட்டிக்கொள்ளாதீர்கள்… - சென்னையில் 12 இடங்களில் “ஹெல்மெட் ஜோன்”

In the Chennai city traffic police have announced two helicopters helmets john in more than 12 locations.
In the Chennai city traffic police have announced two helicopters helmets john in more than 12 locations.
Author
First Published Oct 21, 2017, 5:12 PM IST


சென்னை நகரில் 12-க்கும் மேற்பட்ட இடங்களில் இரு சக்கரவாகனங்களில் செல்பவர்கள் கண்டிப்பாக ஹெல்மெட் அணியும் “ஹெல்மெட் ஜோன்”(தலைகவசம் மண்டலம்) பகுதிகளை போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர்.

 

இந்த 12-க்கும் மேற்பட்ட பகுதிகளுக்குள் இருசக்கரவாகனத்தில் செல்பவர்கள் நுழையும் போதும், வெளியேறும் போதும் கண்டிப்பாக ஹெல்மெட் அணிந்திருக்கிறார்களாக என்பதை தனிப்படை போலீசார் கண்காணிப்பார்கள்.

 

இது குறித்து போலீசார் தரப்பில் கூறப்படுகையில், “ சென்னை நகரில் விபத்துக்களை தடுக்கும் வகையில், 12 க்கும் மேற்பட்ட பகுதிகளில் இருசக்கரவாகனங்களில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிவதை கண்காணிக்கும் பணியை தீவிரப்படுத்தியுள்ளோம். இந்த பகுதிகளை “ஹெல்மெட் ஜோன்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 இதற்கு துணை ஆணையர் உத்தரவின் பெயரில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த 12-க்கும் மேற்பட்ட இடங்கள் என்ன என்று பொதுமக்களுக்கு கூற மாட்டோம். இந்த 12 பகுதிகளில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் ஹெல்மெட் அணியாமல் சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தனர்.

 

இதற்கிடையே போக்குவரத்து போலீஸ் கூடுதல் ஆணையர் கே.பிரையா கூறுகையில், “ சென்னை சாலையில் பெரும்பகுதியான இடங்களில் இருசக்கரவாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்துதான்செல்கிறார்கள். அதேதமயம், போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள், மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்கள், சிவப்பு விளக்கை மதிக்காமல் செல்பவர்கள் ஆகியோரை பிடித்து ஒரு மணிநேரம் ஓடக்கூடிய சாலைபாதுகாப்பு விதிகள், அதைமீறுவதால், ஏற்படும் துயரங்கள் என்ற ஒரு மணிநேர குறும்படத்தை பார்க்க கட்டாயப்படுத்துவோம். இந்த குறும்படம் ஏறக்குறைய ஒருமணிநேரம் திரையிடப்படும், இதை முழுமையாக பாரத்துமுடிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

 

கடந்த ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் வரை அதிவேகமாக வாகனம் ஓட்டுதல் என்பதன் கீழ் 18 ஆயிரத்து 894 வழக்குகள், சிவப்பு விளக்கை மீறிச் சென்றதாக, 23 ஆயிரத்து 552 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. வாகனம்ஓட்டும்போது செல்போன் பயன்படுத்தியதாக 3 ஆயிரத்து 115 வழக்குகளும், மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதாக 5 ஆயிரத்து 168 வழக்குகளும், அதிகசுமை ஏற்றிச் சென்றதாக ஆயிரத்து 56 வழக்குளும், சரக்குவாகனத்தில் மனிதர்களை ஏற்றிச் சென்றதாக 189 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

 

கடந்த 2017ம் ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் 17-ந்தேதி வரை போக்குவரத்து விதிகளை மீறியதாக 14 லட்சத்து 37 ஆயிரத்து 816 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன . இதன் மூலம் போலீசார் ரூ.16.39 கோடி அபராதமாக விதிகளை மீறுவோரிடம் இருந்து வசூலிக்கப்பட்டு, அரசு கருவூலத்தில் செலுத்தப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios